என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி உரிமையாளரை தாக்கிய கும்பல்

- தண்ணீர் பாட்டில் குளிர்ச்சியாக இல்லை எனக்கூறி பணம் தர மறுத்து வாக்குவாதம்
- காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேரிடம் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (வயது 29). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த போது மது போதையில் 3 பேர் பேக்கரிக்கு வந்து சாப்பிட்டனர். பின்னர் தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளனர். இதனையடுத்து சரண்குமார் அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த 3 பேரும் பிரிட்ஜ் இல்லையா, தண்ணீர் குளிர்ச்சியாகவே இல்லை. நீ எல்லாம் எதற்கு கடை வைத்து நடத்துகிறாய் என கூறி பணம் கொடுக்காமல் அங்கு இருந்து செல்ல முயன்றனர்.
இதனையடுத்து சரண்குமார் அவர்களிடம் பணத்தை கேட்டார். அதற்கு இவர்கள் மில்டரிக்காரன் கிட்டேயே பணம் கேட்கிறாயா என 3 பேரும் சேர்ந்து சரண்குமாரை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேக்கரி கடை உரிமையாளரை மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பேக்கரி கடை உரிமையாளர் சரண்குமாரை தாக்கியது காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.
அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.