search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
    X

    விற்பனைக்காக பலவித வண்ணங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

    காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

    • 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
    • நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

    இது தவிர அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 13 நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.

    அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரை ஆனந்த வல்லியம்மன் கோவில் தெருவில் நரசிம்மா ஹேண்டி கிராப்ட் மூலம் பல வண்ணங்களில் பல வகைகளில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    அரை அடி முதல் 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து விநாயகர் சிலைகளும் எந்தவித ரசாயனமும் இல்லாமல் இயற்கையான முறையில் பல விதங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    தஞ்சை மட்டுமல்லாது அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து நரசிம்மா ஹேண்டி கிராப்ட் பூங்குழலி சண்முகம் கூறும் போது:-

    காஞ்சிபுரத்தில் இருந்து பலவித வண்ணங்களில் எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.

    ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகள் உள்ளது. லாரிகள் மூலம் அனைத்து சிலைகளும் கொண்டுவரப்படுகிறது.

    லாரி வாடகை, மூலப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

    இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். எங்களிடம் உள்ள சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டது.

    இதனால் நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும். சிம்ம விநாயகர், அன்னபட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் சிலைகள் உள்ளன. விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×