என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஞ்சநேயருக்கு நூற்றுக்கணக்கான வாழைத்தார்கள் வைத்து படையல் செய்தனர்.
வேதாரண்யம் பகுதிகளில் கம்பசேவை திருவிழா
- வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இந்த ஆண்டு கம்பசேவை விழா நடைபெற்றது நிகழ்ச்சியில்கம்ப விளக்கிற்கு அபிஷேகம் நடைபெற்று, சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது.
இதே போல் ஆஞ்சநேயர் சுவாமி திருஉருவ படம்வைக்கப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பக்தா்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். பெண்கள் பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன
இதே போல் மறைஞாயநல்லூர், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் ஆகிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னா் பெருமாள் வண்ண மலர்களாலும், துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.






