search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் பரிசுத்தொகை வழங்கிய போது எடுத்த படம்.

    விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

    • போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்து ஒன்றை மகாவிஷ்ணு குமரட்டி யாபுரம்-ராமசுப்பு, டி.சுப்பையாபுரம் ஆகிய மாட்டு வண்டிகள் தட்டி சென்றது. எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் முதல் பரிசாக ரூ.50ஆயிரத்து ஒன்றை, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு, பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×