search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்மசிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
    X

    பார்மசிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

    • மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிவகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்பொழுது மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசிஎண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவுசெய்து பயன்பெ றலாம்.

    மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வுவினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்று ள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர்,பாலினம்,தந்தைம ற்றும் தாய் பெயர், முக வரி,ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்யவேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்ததேர்வுக்குதயா ராகிறோம் என்பதைதேர்வு செய்து,அதில் வரும் பாடக் குறிப்புகளைதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம்,ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான பகுதி யும் கொடுக்கப்பட்டு ள்ளது.

    அரசு போட்டித்தேர்வு களுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

    அத்துடன் ஊக்கஉரை கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×