என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து போதை மாத்திரை சப்ளை- மாணவர் உள்பட நான்கு பேர் சிக்கினர்
- போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம்.
- தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக திருச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு வாலிபர்கள் சில நின்று கொண்டு கல்லூரி மாணவரிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதைடுத்து அந்த கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், விற்க இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் உதவியுடன் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்கும் முயற்சியில் இந்த கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம். இதையடுத்து அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்