search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை- ரூ.40 ஆயிரம் அபராதம் விதிப்பு
    X

    50 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'திடீர்' சோதனை- ரூ.40 ஆயிரம் அபராதம் விதிப்பு

    • சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அகாரிகள் நேற்று இரவு 'திடீர்' சோதனை மேற்கொண்டனர்.

    பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் உணவகங்கள், மளிகை கடை குடோன்கள் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடந்தது.

    சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, முதல் முறை தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரமும், 3-வது முறை கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது பூந்தமல்லி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி வேலவன் உடன் இருந்தார்.

    Next Story
    ×