என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
  X

  மாரியம்மன் முன்பு பூக்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பூ

  மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதன்படி இன்று மதியம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
  • பின்னர் மாரியம்மன் கோவிலில் தேரோடும் வீதிகளில் பூ ரதங்கள் ஊர்வலமாக சென்றன.

  தஞ்சாவூர்:

  தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றது.

  அதன்படி இன்று மதியம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

  பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலுக்கு வந்து அடைந்தன. பின்னர் மாரியம்மன் கோவிலில் தேரோடும் வீதிகளில் பூ ரதங்கள் ஊர்வலமாக சென்றன. இதையடுத்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

  பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அருள்மொழிபேட்டை கிராமத்தில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்த காட்சி.

  Next Story
  ×