என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம்
- கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- 7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெறும்.
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநா தசுவாமி கோயில், நவக்கி ரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் ராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூ ர்த்திகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடி மரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்ச ள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனைசெய்வி க்கப்பட்ட பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்ப ட்டது.
இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் விழாவில் ஓலைசப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 7ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், 9ம் நாள் விழாவில் தேரோட்டமும், 10ம் நாள் விழாவில் கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நிறைவு நாளான 11-நாள் விழாவில் விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு புஷ்ப பல்லாக்குடன் வீதியுலா உற்சவத்துடன் நடை பெறுகிறது.






