என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆய்க்குடியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி
  X

  பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்ட காட்சி..
  ஆய்க்குடியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
  • வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

  தென்காசி:

  தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரைபடி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சியில் வருகிற 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்கு வீடு வீடாக தேசிய கொடி வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவதற்கு பணியாளர்களுக்கு ஆணையிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடியினை வழங்கி வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

  இந்த கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×