search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அருகே  மீனவர்கள்  போராட்டம்
    X

    மீனவர்களின் போராட்டத்தால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    திருச்செந்தூர் அருகே மீனவர்கள் போராட்டம்

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது.
    • மீனவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின் (வயது 32), பிரசாத் (42) ஆகிய மீனவர்கள் மாயமாகினர். இதனையடுத்து மாயமான மீனவர்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக மாவட்ட கலெக்டர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீனவர்கள் மாயமாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் வாழ்வாதமின்றி தவித்து வருவ தாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க கோரியும், அமலிநகரில் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×