என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை ஆற்றுப்பாலத்தில் பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்
- நெல்லை சந்திப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், அப்துல்காதர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது கொக்கிர குளம் புதிய ஆற்றுபாலத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், அப்துல்காதர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள்
அப்போது கொக்கிர குளம் புதிய ஆற்றுபாலத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் டவுன், சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
சக மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் வருவதையொட்டி நள்ளிரவில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் தங்களது பெற்றோர்க ளுடன் போலீஸ்நிலையம் சென்றனர். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.






