search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் விரைவில் தீயணைப்பு மண்டல அலுவலகம்-தீயணைப்புதுறை டி.ஜி.பி. பேட்டி
    X

    பாளை தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டி.ஜி.பி.ரவி.

    நெல்லையில் விரைவில் தீயணைப்பு மண்டல அலுவலகம்-தீயணைப்புதுறை டி.ஜி.பி. பேட்டி

    • தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

    இந்த பயிற்சியினை இன்று டி.ஜி.பி. ரவி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள அலுவலக கோப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம், கடலூர் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மண்டல அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 9 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் தமிழக தீயணைப்பு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பபட்டு உள்ளது. 15-வது நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ.343 கோடி தீயணைப்புதுறைக்கு ஒதுக்கப்பட்டு நவீன மீட்புப்பணிக்கான எந்திரங்கள் வாங்கும்பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×