என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பெரியகுளத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம்
- வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
- தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரையில் நல்லமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறிய டித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் பொதுமக்களே தீயை அணைத்து கட்டுப்படுத்தி னர்.
மேலும் தீ பற்றிய உடன் அங்கு இருந்த மின்வாரிய பணியாளர்கள் மின்சார த்தை துண்டித்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






