என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவி
- அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் வழங்கினார்
- மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி காரபிள்ளு கிராம மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரபிள்ளுவை சேர்ந்த பாஞ்சாலி என்பவர் உயிர் இழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத் காரபிள்ளு கிராமத்திற்கு நேரில்சென்று விபத்தில் பலியான பாஞ்சாலி குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் கடநாடுகுமார், முன்னால் ஒன்றிய செயலாளர் குண்டன், பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் ஆகிேயார் உடன் இருந்தனர்.
Next Story






