search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருகும் பயிர்களை காப்பாற்ற குளங்களில் இருந்து தண்ணீர் இறைக்கும் விவசாயிகள்
    X

    கருகிய பயிர்களை வேதனையுடன் பார்வையிடும் விவசாயிகள்.

    கருகும் பயிர்களை காப்பாற்ற குளங்களில் இருந்து தண்ணீர் இறைக்கும் விவசாயிகள்

    • 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கருக தொடங்கின.
    • ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாகும்.

    முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த பகுதிக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீரை மட்டுமே கொண்டு இப்பகுதியில் குருவை, சம்பா, தாளடி, பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

    ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளான திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளுக்கு முள்ளி ஆறு. பாமணி கோரையாறு. அரிச்சந்திரா அடப்பாறு என அனைத்து ஆறுகளின் பாசன வாய்க்கால்கள் வடிகால்களை முறையாக முழுமையாக தண்ணீர் வந்துசேரவில்லை.

    இதனால் நடப்பாண்டில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர், முத்துப்பேட்டை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட குருவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டது.

    இதனால் பல விவசாயிகள் கருகிய குருவைப் பயிர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து சம்பா பயிரை நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

    தற்பொழுது கர்நாடகாவில் காவேரியில் தண்ணீர் தர முடியாது என பல்வேறு போராட்டங்களில் தீவிரமடைந்த நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் வராத நிலையிலும், மழை இல்லாத காரணத்தினாலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் 14 ஆயிரம் ஏக்கரில், முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் மழை இன்றி கருக தொடங்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளங்களில் இருந்து இறவை இஞ்சின் மூலம் வயல்கலுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

    குளங்களில் உள்ள தண்ணீரை இறைப்பதால் கால்நடைகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்கபடுகின்றது.

    மேலும் குளங்களில் வாய்க்காலில் உள்ள நீரை கொண்டு தற்போது பயிரை காப்பாற்றினாலும் மழை இல்லாமல் கடும் வெயிலால் கருகும் பயிரை வரும் காலங்களில் எப்படி காப்பாற்றுவது என விவசாயிகள் கண்ணீர் வடிகின்றனர்.

    குறுவை பாதிப்பிற்கு ஹெக்டருக்கு 13.500 ரூ அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது. அதனை அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×