search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில், விவசாயிகள் நூதன போராட்டம்
    X

    காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்.

    கும்பகோணத்தில், விவசாயிகள் நூதன போராட்டம்

    • 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
    • வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.

    ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×