search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் நிதியை பெற  விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்கலெக்டர் பழனி தகவல்
    X

    அரசின் நிதியை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்கலெக்டர் பழனி தகவல்

    • ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×