search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவுடையானூர்-சாலையடியூர் சாலையை சீரமைக்க  விவசாயிகள் கோரிக்கை
    X

    சேதமான சாலையை படத்தில் காணலாம்.




    ஆவுடையானூர்-சாலையடியூர் சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

    • சாலை பராமரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.
    • சாலையானது பெருமளவில் மோசமாக உள்ளதால் விவசாயிகள் இந்தச்சாலையின் வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர் சாலையடியூர் வழியாக தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4 வழிச்சாலையை சென்றடையும் சாலையானது யூனியன் சாலையாக இருந்துவந்தது.

    தற்போது அந்த சாலையானது நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.இவை பராமரிக்கப்பட்டு 5ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.

    இச்சாலைகள் அனைத்து பகுதிகளிலும் பெருமளவில் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையானது பாவூர்சத்திரம் காய்கறிகள் மார்கெட்செல்லும் பிரதான சாலையாகும் இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விளை நிலங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற பல்வேறு காய்கறிகள் பயிரிட்டு வருகிறார்கள். காலையில் எழுந்ததும் வயல்களில் சென்று காய்கறிகள் எடுத்துக் கொண்டு மாலையில் 4 மணிக்குள் மார்க்கெட் செல்ல வேண்டும்.

    சாலையானது பெருமளவில் மோசமாக உள்ளதால் விவசாயிகள் இந்தச்சாலையின் வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    எனவே விவசாயிகள் நலன்கருதி இந்தச்சாலையை உடனடியாக பராமரித்து கொடுத்திட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×