என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை
- சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
- வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவ தாகவும் சேதப்படுத்தும் நெற்பயிர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் எனவும் ஏரியில் மணல் எடுப்பதை தடுக்கவும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story






