search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
    X

    விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

    • மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
    • வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலஷ்மி வரவேற்றார். தொடர்ச்சியாக வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் சம்பா தாளடி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை வரப்பில் உளுந்து சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து பயிறுசாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.

    மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் இரவில் ஆந்தை பந்தலாக அது செயல்பட்டு எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் இளவரசன் தோட்டக்கலை துறை மானியங்கள் பற்றியும் பழ மரங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி பற்றியும் கூறினார்.

    வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கௌசல்யா வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    வேளாண்மை துணை அலுவலர் ரவி பி.எம். கிசான் திட்டத்தில் கே.ஒய்.சி. ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது பற்றி பேசினார்.

    இதில் வேளாண்மை அலுவலர் கிரிஜா, தோட்டக்கலை அலுவலர் மதுமிதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர் நந்தினி, உதவி அலுவலர் விற்பனை உதவி அலுவலர் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர்.

    எதிர்வரும் பருவங்களுக்கு ஏற்ப அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சிகள் கண்டுனர் சுற்றுலாக்கள் செயல் விளக்கங்கள் மற்ற செயல்பாடுகள் பற்றிய தீர்மானங்கள் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக் மற்றும் அகல்யா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    Next Story
    ×