search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில்   விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும்.

    கடலூர்:

    திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க வட்ட செயலாளர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பா ட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்தில் 28 அடி தண்ணீர் தற்போது பிடித்துள்ளது. பாசனத்திற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பதாக பொதுப்பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து வாய்க்கால்களும் முறையாக தூர்வாராமல் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக செல்வதில்லை, உடனடியாக அனைத்து வாய்க்கால்களை முறையாக தூர்வாரி 300 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாயிகள் நலன் கருதி காவிரி உபரி நீரை வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் அனைத்து காலகட்ட ங்களிலும் தயங்காமல் விவசாயம் செய்யும் சூழ்நிலை உருவாகும். திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    Next Story
    ×