search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆவுடையனூர்  புனித அருளப்பர் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
    X

    பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    ஆவுடையனூர் புனித அருளப்பர் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு இணைந்து புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் செயலாளர் ரஜினி முன்னிலை வகித்தார். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப் வரவேற்று பேசினார்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், கண் தான விழிப்புணர்வினுடைய நிறுவனரும், 324-ஏ மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமாகிய கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அபர்ணா 2,546 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 116 மாணவர்களுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. மாண வர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மரிய கிளிண்டன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×