search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர்:  எடப்பாடி பழனிசாமி பக்கம்  அ.தி.மு.க.வினர் 99 சதவீதம் பேர் உள்ளனர்- தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேச்சு
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் பேசிய காட்சி.

    ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர்: எடப்பாடி பழனிசாமி பக்கம் அ.தி.மு.க.வினர் 99 சதவீதம் பேர் உள்ளனர்- தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேச்சு

    • தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார்.

    சண்முகநாதன்

    இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, ஜெயராணி, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் வரவேற்றார். கூட்டத்தில தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஸ்டிக்கர் ஒட்டி

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார். சோதனையை கடந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதனையை படைப்பார். அவரது பக்கம் 99 சதவீதம் பேர் இருக்கின்றனர். ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

    தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்வரும் தேர்தலையும் எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவார். அண்ணாவின் வழியில் அவரது கொள்கைகளை தாங்கி வெற்றிக்கனியை பறிப்போம். தமிழக அரசு எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இலவச சேலை

    பின்னர் 250 பேருக்கு இலவச சேலை வழங்கினார். தொடர்ந்து தலைமை பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், வைகை பாண்டி, ஞானதாஸ் உள்பட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வக்கீல் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் -இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் வலசை வெயிலுமுத்து, வக்கீல் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, நிர்வாகிகள் வக்கீல் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், குமார், உதயகுமார், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், வெங்கடேஷ், திருச்சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் நட்டார்முத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×