என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் தமிழ் நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மைக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசிய தாவது:–
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட திட்டக் கிராமங்களில், கிராம மக்கள் பங்கேற்புடன் வனப் பாதுகாப்பு மற்றும் வன வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம மக்களின் வருவாய் பெருக்கும் நோக்கத்துடன் வனத்துறை மூலம் சுழல் நிதிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திட்ட கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் பொருட்டு, மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மைக் குழுக் கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.அதன்படி தேர்வு செய்யப்பட்ட திட்டக்கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் நாகராஜன், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் பத்மா, கோபி கோட்ட வன அலுவலர் சேகர், அனைத்துத் துறை அலுவலர்கள், ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் மற்றும் கோபி வனக் கோட்டத்தைச் சார்ந்த வனச்சரக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்ட மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் நாகராஜன், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் அமுதா உத்தரவுப்படி கோவை தொழிலாளர் இணை ஆணையர் மாரிமுத்து அறிவுரைப்படி ஈரோடு மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மோகன் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள இறைச்சி கூடங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இறைச்சி கூடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்களா? என்று சோதனை நடத்தினர்.
ஈரோடு, பவானி, பெருந் துறை, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மாட்டு இறைச்சி மற்றும் மீன் கடை களில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலார் உதவி ஆய்வாளர்கள் இந்த அதிரடி சோதனையில் ஈடு பட்டனர்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் ரூ.20 அயிரம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும், குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்த கூடாது என்ற விழிப்புணர்வு வாசகமும் ஒட்டப்பட்டது.
இறைச்சி கூடங்களில் உள்ள முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரிகள் உடனடியாக முத்திரை ஆய்வரிடம் முத்திரையிட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் யாரும் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து கடை நிறுவனங்களும், பொதுமக்களும் முன் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரேனும் பணியில் அமர்த்தப்படுவது கண்டால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தொழிலாளர் ஆய்வாளர்க.ந.மோகன் கூறியுள்ளார்.
ஈரோடு:
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். இந்த ஆடி மாதம் இன்று பிறந்தது. இதையொட்டி ஈரோட்டில் உள்ள கோவில்களில் குறிப்பாக அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது.
கள்ளுக்கடைமேடு கொண்டத்து காளியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், கருங்கல் பாளையம் மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர்.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
இதேபோல் திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலிலும் இன்று திரளான பக்தர்கள் சென்று திண்டல் முருகனை வழிபட்டனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் வாய்க்கால் ரோடு ராமர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42) கூலி தொழிலாளி.
நேற்று இரவு 9 மணி அளவில் இவரும் இவரது நண்பர்களும் வீட்டு முன்நின்று கொண்டு பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்தது.
இதில் அங்கு நின்று பேசி கொண்டிருந்த செல்வராஜ் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து துடித்தார்.
உடனடியாக அவரை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பிறகு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
அந்த காரில் வந்த வெங்கட்ராமன் (56) என்பவரும் அவரது பேத்தி அமிர்தவர்ஷிணி (5) கார் டிரைவர் கோபியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் வழக்கம்போல் இரவு 9 மணி வரை அந்த பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் நேற்று நல்ல வேளையாக யாரும் விளையாடவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸ்– சப் இன்ஸ்பெக்டர் சாரதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
கொடுமுடி சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் ரிஸ்வானா (வயது 28). இவரது முதல் கணவர் அப்துல் உசேன் கடந்த 8 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
முதல் கணவர் இறந்து பல ஆண்டாகியும் ரிஸ்வானா அவரது ஞாபகமாகவே இருந்தார். அவரை மறக்க முடியாமல் இருந்தார்.
இந்த நிலையில் 3 ஆண்டுக்கு முன் அவரது பெற்றோர் அவருக்கு பர்கத்அலி என்பவரை 2–வது திருமணம் செய்து வைத்தனர். 2–வது திருமணம் செய்த பிறகும் அவர் முதல் கணவரை மறக்க முடியாமல் இருந்தார்.
இந்த நிலையில் மன வேதனையில் காணப்பட்ட ரிஸ்வானா தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறி துடித்த அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரிஸ்வானா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் கலியன்(என்கிற)ராமச்சந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கடந்த 5ம்தேதி மாந்தோப்பில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தேடப்பட்டசென்னை பக்தவச்சலம் நகரைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52), திரிசூலம் இலுப்பையைச் சேர்ந்த ராஜன் (27), வேலம்மன் நகரைச்சேர்ந்த சந்திரசேகர்(25), அந்தோணிராஜ்(27), ஸ்ரீவில்லிப்புத்துரைச் சேர்ந்த பாலக்குமார்(24) ஆகியோர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
நீதிபதி ராஜா அவர்களை 19ம்தேதி வரையில் நீதி மன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவர் களைக்கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாலை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர் சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோபி தாசில்தார் அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணி புரிந்தவர் செல்வராஜ் (வயது45). கோபி பச்சை மலை அடிவாரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சரிவர வேலைக்கும் போகாமல் இருப்பாராம். சம்பவத்தன்று செல்வராஜ் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் 100 ஆம்புலன்சை வர வழைத்து அவரை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர். வரும் வழிலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்து உள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி பூங்கோதை கோபி போலீசில் புகார் கூறினார். இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு
கரூரை சேர்ந்த வெள்ளமுத்து என்பவரின் மகன் சிவா என்கிற சிவகுமார் (வயது 19).
சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு வேலை விஷயமாக வந்தார்.
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். உடனடியாக அவர் 108ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிறகு மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்தவிபத்து குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோடு கருப்பணங்கோவில் பகுதியில் இருந்து ஓட்டப்பாறை செல்லும் பகுதியில் ஒரு குளம் உள்ளது.
இந்த குளத்தின் முட்புதர் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டு அந்த வழியாக வரும் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரிடமும் தகாத செயல்களில் ஈடுபட்டும் திடீர் என அவரின் ஆடைகளை அவிழ்த்து காட்டியும் செக்ஸ் தொந்தரவு செய்து வந்தார்.
இதனால் இந்த பகுதி ரோட்டில் பெண்கள் தனியாக செல்ல பயந்து வந்தனர். பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் வழியில் இது போல தொல்லை தந்து வந்த நபரை பிடிக்க முடியாமல் பல வாரங்களாக தவித்து வந்தனர். சில பெண்கள் வெளியே செல்ல தயங்கினர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காளிக் கோப்டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு நகரில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக வந்த செல்வம் என்பவரின் மனைவி சங்கீதா என்ற பெண்ணிடம் அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட்ட முற்பட்டார். அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர் ஓடி வந்தனர்.
அருவருக்கத்தக்க செயலில் ஈடுட்ட வாலிபரை மடக்கி பிடித்து சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் அவர் சென்னிமலை மேலப்பாளையம் போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 35) என தெரிய வந்தது. சங்கர் மீது சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு சங்கரை கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்யபட்டு, பெருந்துறை சப்ஜெயிலில் அடைத்தனர்.
செக்ஸ் டாக்சர் கொடுத்து வந்த வாலிபரை பிடித்ததால் அப்பகுதி பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.






