என் மலர்
ஈரோடு
இந்த கோவிலில் பூந்தேர்த்திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நேற்று இரவு 8 மணிக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. 20-ந் தேதி பொங்கல் மற்றும் மாவிளக்கு நடக்கிறது.
21ந்தேதி மாலை 4 மணிக்கு பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூந்தேர் நடக்கிறது. இதில் திரளான பேர் கலந்து கொண்டு வழிபடுகிறார்கள். 22-ந் தேதி பகல் 11 மணிக்கு மறு அபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. விழாவையொட்டி நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் விளக்கு பூஜையில் பெண்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூரில் அதிமுக., மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று காலை பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் வந்திருந்தார். விழா முடிந்தவுடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் கட்சியினரும், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் பெற ரூ 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக அமைச்சரிடம் புகார் கூறினர்.
உடனடியாக தாலுகா அலுவலகம் சென்ற அமைச்சர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை, அரசு சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு செய்யும் பணிகளுக்கு பணம் பெறக்கூடாது என செல்போனில் அழைத்து பேசினார். முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், சான்று வழங்க எவரிடமும் பணம் வாங்க கூடாது, தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அப்போது தாலுகா அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தாலுகா அலுவலகத்திலிருந்த அதிகாரிகளிடம் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.
ஈரோடு:
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு குழு அமைக்கப் பட்டுள்ள விபரங்களையும், குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது கைபேசி எண்களின் விபரங்களையும் கல்லூரி விடுதியில் தெளிவாக மாணவ, மாணவிகள் அறியும் வண்ணம் தெளிவாக பிளக்ஸ் போர்டில் எழுதி வைத்க்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளில் முதலாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் அமைத்து பராமரித்திட வேண்டும்.
கல்லூரி விடுதிகளில் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு விரிவுரையாளர்கள் மாணவ பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுவை கல்லூரியில் அமைக்க வேண்டும்.
கல்லூரியில் மாணவ, மாணவிகள் கேலி செய்யும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவரோ அல்லது அவர்களது பெற்றோரோ இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் போது எவ்வித தாமதமின்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக வரும் புகார்களை பதிவு செய்திட புகார் பதிவேடு ஒன்று தனியாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் இந்நேர்வில் புகார் தெரிவித்திட ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலை பேசி எண் 1077 பயன்படுத்திட கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண் டும்.
தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்களையும், கல்லூரி மாணவர்களையும் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புரையில் கேலி செய்வதை தடுத்திட தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கல்லூரி தொடங்க உள்ளதால் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கூட்ட நடவடிக்கைகளின் நகல்களினை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் தகவலுக்காகவும் தக்க முன்னேற்பாடுகளுக் காகவும் அனுப்பலாம்.
வட்ட அளவில் மற்றும் கோட்ட அளவில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பேரணிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலீசார் இது தொடர்பாக வரப்பெறும் புகார்களை பதிவு செய்து அதன் விவரத்தை உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
கல்லூரி வளாகத்திற்குள் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாணவ, மாணவிகளது நடவடிக் கைகளை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் பேசினார்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரெயில்வே போலீசார் விஜயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகம்படும் படியாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவன் ரெயில் கொள்ளையன் என தெரிய வந்தது. ஓடும் ரெயிலில் பெண்களிடம் நகைகள், செல்போன், பணத்தை திருடியதை ஒப்பு கொண்டான்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், செங் கோடகவுண்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்ராஜ்(வயது31). இவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த மாதம் கொச்சி வேலி எக்ஸ்பிரசில்பயணம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சினாபிஜி(42) என்ற பெண்ணிடம் ஈரோடு, காவிரி ஆர்.எஸ்.பகுதியில் ரெயில்வந்த போது அந்த ரெயிலுக்குள் புகுந்து அரை பவுன் தங்க நகை, விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை திருடி சென்றுள்ளான்.
இதே போன்று ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சோபியா லில்லி(45) என்ற பெண்ணிட மும், காவிரி ஆர்.எஸ்.பகுதியில் ரெயில் வந்த போது ஸ்மார்ட்போன், 2 ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.8 ஆயிரம் பயணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இந்த இரண்டு வழக்கு களிலும் ரெயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த னர்.இவன்தான் இந்த திருட்டை அரங்கேற்றி உள்ளான். செந்தில்ராஜிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செந்தில்ராஜை ரெயில்வே போலீசார் கைது செய்து அவனிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இவன் மீது ஈரோடு, கோயம்புதூர், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 28–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தை சேர்ந்தவர் பத்திரன் என்கிற ஈரையன் (வயது 32). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள முள்வேலியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கர்நாடகா மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.
இதை அவர் அதிக விலைக்கு விற்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவரை கைது செய்தார். மேலும் மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,
தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கர்நாடக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாளவாடி போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு, கை காட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ஜானகி (வயது50). ஜானகி நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சந்தில் திரும்பிய போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி பின் தொடர்ந்து வந்து ஜானகி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்து அறுத்து கொண்டு தப்பி சென்று விட்டான்.
ஜானகி திருடன்..திருடன் என்று சத்தம் போட்டார். இரவு நேரம் என்பதால் மக்கள் யாரும் இல்லை. பின்னர் வீட்டிற்கு வந்த ஜானகி நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறினார்.
இது குறித்து பொன்னு சாமி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பெண்ணிடம் வழிப்பறி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் கடுமையாக இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் சீற்றம் தணிந்து திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தன.
இதையொட்டி பல இடங்களில் மின்னல் வெட்டியது. மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்துகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை ஒரு ‘பிடி’ பிடித்து மற்ற இடத்தில் ஒரு சில துளிகள் மட்டும் போட்டு ஏமாற்றியது.
பவானி, ஆப்பக்கூடல், அத்தாணி, சின்னிமலை கவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிவரை 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் ஓடியது.
இதேபோல் வனப் பகுதிகளான தாளவாடி, தலமலை, ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் பவானி சாகரிலும் பரவலாக மழை பெய்தது.
கோபியிலும் மழை லேசாக பெய்து விட்டு ஏமாற்றியது. குளிர்காற்றால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ‘ஜிலிர்’ என்று காணப்பட்டது. வெப்பமும் தணிந்திருந்தது.
இதேபால் ஈரோட்டிலும் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. மாலையில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் சூழ்ந்தது.
அப்போது இடியும், மின்னலும் கண்ணைப் பறித்தது. இதையொட்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழையோடு நின்றுவிட்டது.






