என் மலர்tooltip icon

    ஈரோடு

    கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானி அருகே உள்ள குப்புச்சிபாளையம் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் காயத்ரி (28) இருவருக்கும் தோட்டகுடியான் பாளையம் அம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள் என்பவரது மகன் கந்தசாமிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

    இந்த நிலையில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையொட்டி காயத்ரி கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அவரது பெற்றோர் மகளை சமாதானம் செய்து வைத்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் சில நாட்களில் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மனவேதனை அடைந்த காயத்ரி வீட்டில் இருந்த குருணை மருந்தை (வி‌ஷம்) குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காயத்ரியின் தந்தை கந்தசாமி பவானி போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் விசாரணை நடத்தி வருகிறார்.

    பனை தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் மேட்டு வளவு என்ற இடத்தில் தனியார் பனை பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மத்திய சிறு குறு தொழில் துறை இணை மந்திரி கிரிராஜ்சிங் பனை மரம் ஏற கூடிய புதிய கருவி, பனை சர்க்கரை, பனை பழரசம், பனை கிழங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

      2050–ம் ஆண்டில் 10–ல் ஒருவருக்கு தான் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே அதிக தண்ணீர் பயன்பாடு இல்லாமல் அதிக அளவில் உற்பத்தி செய்ய கூடிய பனை சர்க்கரையை ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 40 டன் வரை உருவாக்க முடியும்.

    பனை பொருட்கள் அனைத்தும் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், பொட்டாசியம், தாது பொருட்களை கொடுக்கிறது. தற்போது கரும்பு ஆலைகளின் ஆதிக்கத்தால் பனை தொழில் நலிந்து விட்டது. 1967–ல் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் பனை தொழிலை ஊக்கப்படுத்த இந்த பகுதி உள்பட அனைத்து இடங்களிலும் நல வாரியம் ஏற்படுத்தினார். ஆனால் தற்போது 20 சதவீத மக்கள் தான் பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த பனை தொழலை ஊக்கப்படுத்தவும், புரட்சி ஏற்படுத்தவும் நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். கிராம பொருளாதாரத்தை வளர்க்க கூடியதான இந்த பனை தொழிலை கதர் வாரியம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் இந்த தொழிலை நாட்டின் பிற பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தவும் உறுதி எடுத்துள்ளோம்.

    மேலும் பனை தொழிலை பற்றி விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வரிடம் கூறி இந்த தொழிலுக்கு புத்துயிர் அளிக்கவும் நான் பரிந்துரை செய்வேன்.

    இவ்வாறு மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறினார்.

    தொடர்ந்து அவர் பனை மரத்தில் கிடைக்க கூடிய பொருட்களால் செய்த உணவு பண்டங்களான கருப்பட்டி பனைக்கிழங்கு ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். இவை மிகவும் சுவையாக உள்ளது என கூறினார்.

    அப்போது கதர் கமி‌ஷன் மாநில இயக்குனர் தனபால், கதர் வாரிய மண்டல உறுப்பினர் சந்திரமவுலி கோபி தாசில்தார் குமரேசன், கிராம நிர்வாக அலுவலர் நவாப் ஜான், ஊராட்சி உறுப்பினர் மகுடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    டெலிபோன் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    ஈரோடு:

    அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊஞ்சக்காடு ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 46) அரசு பஸ் கண்டக்டர்.

    இவர் அந்தியூர் மந்தை ரோட்டில் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    ஈரோடு:

    ஈரோடு, பெரியார் நகர்,ராசிநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி(58).இவரது மனைவி ராஜேஸ்வரி(50).இவர்களுக்கு அருண்குமார் (28) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் பவானி கூடுதுறை கோவிலுக்கு செல்வற்காக தனது மனைவி ராஜேஸ்வரியுடன் கவுந்தப்பாடி–கே.ஆர்.பாளையம் ரோட்டில் பெரியார் பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.

    அப்போது ஒரு வேன் எதிர்பாராத வகையில் பழனிச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிச்சாமி– ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திண்டலில் சினேகா நாராயணன் என்ற பெண் தொடர்ந்து 2 மணி நேரம் நடனமாடினார் அவரது நடனத்தை ஏராளமான பேர் பார்த்து ரசித்தனர்

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் தெற்கு பள்ளத்தில் உள்ள சாய் குருஸ்தான் யோக் சென்டரில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பெங்களூரை சேர்ந்த சினேகா நாராயணன் என்ற பெண் தொடர்ந்து 2 மணி நேரம் நடனமாடினார்.

    இதில் சிவன், லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் ராமரின் பெருமைகளை விளக்கும் வகையில் வெவ்வேறு நடனங்கள் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

    இவர் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் ஆவார். முன்னதாக ஜேசிஸ் பள்ளி முதல்வர் ரஜினிராணி வாழ்த்தி பேசினார். பேராசிரியர் கோகுல் தொகுப்புரையாற்றினார். சாய் குருஸ்தான் யோக் சென்டர் நிறுவனர் யோகாச் சார்யா டாக்டர் ஏ.கோபால கிருஷ்ணன், பிரதீப் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    ‘கஞ்சா’ பாக்கெட்டுகளுடன் பெண் கைது

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங்போர்டு அருகே உள்ள மாரியம்மன் கோவில் பக்கம் ஈரோடு வடக்கு போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் வெர்னிகா ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு ஈரோடு நாராயண வலசு வாய்க்கால் மேட்டை சேர்ந்த பழனியம்மாள் (வயது 50) என்ற பெண் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவரிடமிருந்து 1050 கிராம் எடை உள்ள கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அவர் கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. அவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கருங்கல்பாளையத்தில் மாடியில் படுத்து தூங்கியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). டையிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் தினமும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தான் படுத்து தூங்குவாராம். அதே போல் நேற்று இரவும் தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் சக்திவேல் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் கீழே எட்டி பார்த்தனர்.

    அப்போது சக்திவேல் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் மாடியில் இருந்து கீழே விழுந்திருப்பார் என தெரிகிறது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி புதுமாப்பிள்ளை உடல் நசுங்கி பலியானார்.

    ஈரோடு:

    பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்தவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு, பணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 33) என தெரியவந்தது. இவர் மனைவி கோமதி (32).

    இரண்டு மாதத்திற்கு முன்புதான் கார்த்திகேயனுக்கு கோமதியுடன் திருமணம் நடந்துள்ளது. பெருந்துறையில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று புங்கம் பாடி ரெயில்பாதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திருப்பூரிலிருந்து ஈரோட்டிற்கு ரெயில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் வருவதை கவனிக் காமல் கார்த்திகேயன் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    கார்த்திகேயனின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியது.

    ×