என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி-ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த மழை
    X

    பவானி-ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த மழை

    ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் கடுமையாக இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் சீற்றம் தணிந்து திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தன.

    இதையொட்டி பல இடங்களில் மின்னல் வெட்டியது. மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்துகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை ஒரு ‘பிடி’ பிடித்து மற்ற இடத்தில் ஒரு சில துளிகள் மட்டும் போட்டு ஏமாற்றியது.

    பவானி, ஆப்பக்கூடல், அத்தாணி, சின்னிமலை கவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிவரை 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் ஓடியது.

    இதேபோல் வனப் பகுதிகளான தாளவாடி, தலமலை, ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் பவானி சாகரிலும் பரவலாக மழை பெய்தது.

    கோபியிலும் மழை லேசாக பெய்து விட்டு ஏமாற்றியது. குளிர்காற்றால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ‘ஜிலிர்’ என்று காணப்பட்டது. வெப்பமும் தணிந்திருந்தது.

    இதேபால் ஈரோட்டிலும் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. மாலையில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் சூழ்ந்தது.

    அப்போது இடியும், மின்னலும் கண்ணைப் பறித்தது. இதையொட்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழையோடு நின்றுவிட்டது.

    Next Story
    ×