என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கூலிப்படை தலைவன் கொலை: பவானி கோர்ட்டில் கொலையாளிகள் சரண்
    X

    சென்னை கூலிப்படை தலைவன் கொலை: பவானி கோர்ட்டில் கொலையாளிகள் சரண்

    சென்னையைச்சேர்ந்த பிரபல ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த 5 பேர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

    பவானி:

    சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் கலியன்(என்கிற)ராமச்சந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கடந்த 5ம்தேதி மாந்தோப்பில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இக்கொலை வழக்கில் தேடப்பட்டசென்னை பக்தவச்சலம் நகரைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52), திரிசூலம் இலுப்பையைச் சேர்ந்த ராஜன் (27), வேலம்மன் நகரைச்சேர்ந்த சந்திரசேகர்(25), அந்தோணிராஜ்(27), ஸ்ரீவில்லிப்புத்துரைச் சேர்ந்த பாலக்குமார்(24) ஆகியோர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

    நீதிபதி ராஜா அவர்களை 19ம்தேதி வரையில் நீதி மன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவர் களைக்கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    Next Story
    ×