என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே கார் மோதி கரூர் வாலிபர் பலி
    X

    கொடுமுடி அருகே கார் மோதி கரூர் வாலிபர் பலி

    கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கரூர் வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    ஈரோடு

    கரூரை சேர்ந்த வெள்ளமுத்து என்பவரின் மகன் சிவா என்கிற சிவகுமார் (வயது 19).

    சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு வேலை வி‌ஷயமாக வந்தார்.

    கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். உடனடியாக அவர் 108ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×