என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபர் கைது
    X

    சென்னிமலையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபர் கைது

    சென்னிமலையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோடு கருப்பணங்கோவில் பகுதியில் இருந்து ஓட்டப்பாறை செல்லும் பகுதியில் ஒரு குளம் உள்ளது.

    இந்த குளத்தின் முட்புதர் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டு அந்த வழியாக வரும் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரிடமும் தகாத செயல்களில் ஈடுபட்டும் திடீர் என அவரின் ஆடைகளை அவிழ்த்து காட்டியும் செக்ஸ் தொந்தரவு செய்து வந்தார்.

    இதனால் இந்த பகுதி ரோட்டில் பெண்கள் தனியாக செல்ல பயந்து வந்தனர். பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் வழியில் இது போல தொல்லை தந்து வந்த நபரை பிடிக்க முடியாமல் பல வாரங்களாக தவித்து வந்தனர். சில பெண்கள் வெளியே செல்ல தயங்கினர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காளிக் கோப்டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு நகரில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக வந்த செல்வம் என்பவரின் மனைவி சங்கீதா என்ற பெண்ணிடம் அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட்ட முற்பட்டார். அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர் ஓடி வந்தனர்.

    அருவருக்கத்தக்க செயலில் ஈடுட்ட வாலிபரை மடக்கி பிடித்து சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் அவர் சென்னிமலை மேலப்பாளையம் போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 35) என தெரிய வந்தது. சங்கர் மீது சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு சங்கரை கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்யபட்டு, பெருந்துறை சப்ஜெயிலில் அடைத்தனர்.

    செக்ஸ் டாக்சர் கொடுத்து வந்த வாலிபரை பிடித்ததால் அப்பகுதி பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
    Next Story
    ×