என் மலர்
ஈரோடு
ஈரோடு:
பவானிசாகர் அணைநீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தண்ணீர் வரத்தால் படிப்படியாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர் மட்டம் 5 அடிக்கு மேல் உயர்ந்தது.
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்று விட்டது. மேலும் நீலகிரி மலையில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டது.
இதனால் அணைக்கு நீர்வரத்து நேற்று முதல் வெகுவாக குறைந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 585 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆற்றுக்கு 150 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 அடி கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் இன்று 59.32 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு குமலன் குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மோகன் (வயது 20), கோகுல் (20) இவர்கள் இருவரும் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் இன்று காலை கல்லூரிக்கு சென்றனர்.
ஈரோடு செங்கோடம்பள்ளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு கல்லூரி பஸ் திடீர் என்று பிரேக் போட்டு நின்றது.
இதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மோகன் , கோகுல் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இந்த நேரத்தில் பின்னால் வந்த ஒரு அரசு டவுன் பஸ் மாணவர்கள் மீது மோதியது.இதில் மோகன், கோகுல் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த (ஆகஸ்டு) மாதம் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா நடக்கிறது. அன்று அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அரசு சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தீரன் சின்னமலை நினைவு விழாவையொட்டி வரும் ஆகஸ்டு 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையாகும்.
இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 20-ந்தேதி (சனிக்கிழமை)பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
ஈரோடு:
நசியனூர் அருகே உள்ள வேட்டுவபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் மணி (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜீவிதா (வயது 14), கவுசல்யா என்ற 2 மகள்கள் உள்ளனர், இதில் ஜீவிதா 6–ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு அவர்கள் அனைவரும் தோட்டத்து குடிசை வீட்டில் படுத்து தூங்கினர்.அப்போது அதிகாலையில் மாணவி ஜீவிதாவை ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர் அலறினார்.
உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஜீவிதா வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
திண்டுக்கல்லில் உள்ள எல்.ஜி.பி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியம் (வயது 46). இவர் இயற்கை உணவுகளை விற்பனை செய்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று இயற்கை உணவுகைளை விற்பனை செய்து வருவார்.
நேற்று பீட்டர் ஆரோக்கியம் வேலை விசியமாக சேலம் வந்தார். அங்கு வியாபாரத்தை முடித்து விட்டு காரில் கோவைக்கு புறப்பட்டார். இந்த காரை சேலம் உமையாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் சென்ற கார் பெருந்துறை சரளை சண்முகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனம் திடீர் என்று பிரேக் போட்டு நின்றது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ராஜேந்திரன் காரை வேகமாக திருப்பினார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த வியாபாரி பீட்டர் ஆரோக்கி யம் படுகாயம் அடைந்தார். அவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் உள்ள எல்.ஜி.பி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியம் (வயது 46). இவர் இயற்கை உணவுகளை விற்பனை செய்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று இயற்கை உணவுகைளை விற்பனை செய்து வருவார்.
நேற்று பீட்டர் ஆரோக்கியம் வேலை விசியமாக சேலம் வந்தார். அங்கு வியாபாரத்தை முடித்துவிட்டு காரில் கோவைக்கு புறப்பட்டார். இந்த காரை சேலம் உமையாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் சென்ற கார் பெருந்துறை சரளை சண்முகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனம் திடீர் என்று பிரேக் போட்டு நின்றது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ராஜேந்திரன் காரை வேகமாக திருப்பினார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த வியாபாரி பீட்டர் ஆரோக்கியம் படுகாயம் அடைந்தார். அவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆடி தேர்திருவிழா நேற்று பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
பூச்சாட்டு விழாவையொட்டி பக்தர்களுக்கு குருநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழாவையொட்டி கோவில் புது பொலிவுடன் திகழ்கிறது. ஏராளமான கடைகளும் வைக்கப்பட்டுள்ளது.
பூச்சாட்டையொட்டி தற்போது கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. திருவிழா நெருங்க...நெருங்க கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இப்போதே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குருநாதசாமியை தரிசனம் செய்து கொண்டு செல்கிறார்கள்.
வரும் 27–ந் தேதி கோவிலில் கொடியேற்றப்படுகிறது. வரும் 3–ந் தேதி முதல் வனபூஜை நடக்கிறது. பக்தர்கள் பெரும் ஆவலலுடன் எதிர்பார்க்கும் தேர்திருவிழா வரும் 10–ந் தேதி நடக்கிறது. 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேர்களில் குருநாதசாமி மற்றும் பெருமாள் சாமி உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு தேர்வலம் வரும். இந்த தேர்களை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வருவது விசேஷம் ஆகும்.
விழாவையொட்டி 4 நாட்கள் கோவில் முன் குதிரை மற்றும் மாட்டுச்சந்தைகள் நடைபெறும். இந்தியா முழுவதுமிலிருந்து பல வகையான குதிரைகள் மாடுகள் சந்தைக்கு வரும்.
இவற்றை வாங்கவும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆந்தியூரில் குவிய உள்ளார்கள்.
இந்த கோவிலில் தொடர்ந்து 27 நாட்கள் சண்டி ஹோமம் நடக்க உள்ளது. இந்த சண்டி ஹோமம் இன்று தொடங்கி தொடர்ந்து நடக்கிறது.
உலக அமைதி, நிர்வளம் பெருகவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் இந்த சண்டி ஹோமம் நடைப்பெறுகிறது.
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு தனி தனியாக ஹோமங்கள் நடைப்பெறுகிறது. தினமும் காலையில் விக்னேஸ்வர பூஜையும் சங்கல்பம் கலச ஆவாஹனமும், தேவி மகாத்மிய பாராயணமும் நடக்கிறது.
மதியம் 1 மணிக்கு மேல் கலச அபிஷேக அர்ச்சனை மற்றும் தீபாரதனையும் நடக்கிறது. இந்த ஹோமங்களை சிருங்கேரி ஸ்ரீ மடமுத்ராதிகாரிய புதூர் பத்ம நாப அய்யர் தலைமையில் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலை செல்வன் (வயது 25). டிராவல்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18–ந் தேதி பவித்ராவுக்கு பிறந்த நாள் வந்தது. இதற்காக கலைசெல்வன் தனது மனைவிக்கு ஆசையாக சேலை எடுத்து கொடுத்தார்.
தனது கணவன் தன் மேல் உள்ள பிரியத்தினால் ஆசையுடன் எடுத்து கொடுத்த சேலையை கட்டிய பவித்ரா கணவனுடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
இந்த நிலையில் அவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கலைச் செல்வன்–பவித்ரா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தகராறு செய்து கொண்டனர்.
இதனால் பவித்ரா கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கலைச்செல்வன் அழைத்தார். ஆனால் பவித்ரா மறுத்து விட்டார்.
இதனால் கலைச் செல்வன் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இதை தொடர்ந்து தனது மனைவியின் பிறந்த நாளுக்கு எடுத்து கொடுத்த சேலையால் தனது வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி தாலுகா கொளப்ப லூர், அம்மன் கோவில் பதி, வரதப்ப கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி துர்காதேவி(23). சம்பவத்தன்று ஆனந்தன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.
துர்காதேவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். ஆனந்தன் மனைவிக்கு போன் செய்துள்ளார். துர்காதேவி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விபரத்தை கூறினார். அதன்படி பக்கத்து வீட்டு பெண் கதவை தட்டி உள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதற்றத்துடன் ஜன்னல் வழியாக பார்த்த துர்காதேவி அறையில் தூக்கி மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துர்காதேவி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். துர்காதேவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று உடனடியாக தெரியவில்லை.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் வன கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவரது மனைவி ஜடசி.
ஜடசியும் மேலும் 4 பெண்களும் சேர்ந்து அரே பாளையம் வனத்துக்குள் விறகு பொறுக்க சென்றனர்.
மதியம் வனத்துக்குள் புகுந்த இவர்கள் 5 பேரில் 4 பேர் திரும்பி வந்து விட்டனர். ஆனால் ஜடசி மட்டும் வரவில்லை.
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஊர்காரர் களும் அவரை தேடி காட்டுக்குள் நழைந்து தேடினர்.
அப்போது ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானை அருகே ஜடசி பிணமாக கிடந்தார். அந்த யானை அவரை தாக்கி கொன்றது தெரிய வந்தது.
பொதுமக்கள் அந்த யானை அருகே சென்றதால் அவர்களையும் அந்த யானை மிரட்டியது. இதனால் ஜடசி உடலை மீட்க முடிய வில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களாலும் யானை தாக்கி பலியான ஜடேசி உடலை மீட்க முடியவில்லை.
தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அல்லிராஜா. இவரது மனைவி சசிகலா (வயது 37).
சசிகலாவும், இவரது மகள் அபிராமி (15)யும் ஸ்கூட்டரில் பவானிசாகர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மகள் அபிராமி ஓட்டி செல்ல தாய் சசிகலா பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ட்டரை ஓட்டி சென்ற அபிராமி திடீரென பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் நிலை குலைந்து ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து துடித்தனர். இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சசிகலாவை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






