என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணைநீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    தண்ணீர் வரத்தால் படிப்படியாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர் மட்டம் 5 அடிக்கு மேல் உயர்ந்தது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்று விட்டது. மேலும் நீலகிரி மலையில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து நேற்று முதல் வெகுவாக குறைந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 585 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆற்றுக்கு 150 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 அடி கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் இன்று 59.32 அடியாக உள்ளது.

    Next Story
    ×