என் மலர்
ஈரோடு
நான் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்காக கோபி வந்துள்ளேன். எனக்கு அறிமுகமான, இயற்கை சூழல் நிறைந்த, பசுமை மிகுந்த ஊர் கோபியாகும்.
இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். நான் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு டெல்லியில் விமானப் படையில் பணியாற்றினேன். அங்கு ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக நான் பல்வேறு நகைச்சுவை நாடகங்களை நடத்தி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளேன்.
நான் முதன் முதலில் மனம் ஒரு குரங்கு என்ற நாடகத்தில் நடித்தேன். பின்னர், டைரக்டர் பாலச்சந்தர் இயக்கிய திரைப்படமான பட்டின பிரவேசத்தில் மூத்த அண்ணன் வேடத்தில் முதன் முதலாக நடித்தேன். அப்போது தான் எனக்கு டைரக்டர் பாலச்சந்தர் டெல்லி கணேஷ் என பெயர் வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரர் திரைப்படத்தில் அப்பண்ணஆச்சாரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வருங்கால தலைமுறையினர் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும். கோபம் கொள்ளக்கூடாது. ஒருவருக்கு தீமை செய்யாமல் இருப்பதே பெரிய நன்மை.
இவ்வாறு டெல்லி கணேஷ் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வழியாக சென்னை சென்ற ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பணம் இருந்த ரெயில் பெட்டியின் கூரையை பிரித்து குதித்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சென்னை, விருத்தாச்சலம், சேலம், ஈரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2-ம் கட்ட விசாரணை நடந்துள்ளது. முதல் கட்டமாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு விசாரணை நடத்தினார். 2-ம் கட்டமாக இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணையை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் 3-ம் கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படையினர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடத்தினர்.
ஈரோடு ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் உள்ள ஓய்வறையில் இந்த விசாரணை நடந்தது.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரெயில் பெட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பிறகு சேலத்துக்கு அனுப்பபட்டது. இதனால் ஈரோட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்த போது ஈரோடு ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் மற்றும் பணிமனை ஊழியர்களிடமும் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடை இடத்தின் உரிமையாளர் ஊஞ்சப்பாளையம் கருங்கல் தோட்டத்தை சேர்ந்த அப்புசாமி ஆவார்.
கடைக்கு மாத வாடகையாக அப்புசாமி ரூ.2 ஆயிரம் வசூலித்து வந்தார். இது தொடர்பாக இவருக்கும் கடை வைத்து நடத்தும் ஜெயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வாடகை பணம் தராவிட்டால் கடையை காலி செய்யுங்கள்... என்று அப்புசாமி கூறினாராம்.
இது தொடர்பாக பவானி கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ஜெயலட்சுமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் அப்புசாமியும் அவரது ஆட்களும் முன் விரோதம் காரணமாக தனது கடையை உடைத்து கொள்ளையடித்து உள்ளனர். என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அப்புசாமி மற்றும் பூதப்பாடியை சேர்ந்த முனியப்பன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கிருஷ்ணஜெயந்தி விழா வையொட்டி ஈரோடு மாவட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், சிவகிரி, கொடுமுடி, பெருந்துறை, கவுந்தபாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கோவில்களில் உள்ள கிருஷ்ணர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இதேபோல் வீடுகளில் மக்கள் கிருஷ்ணர் சிலைகள் வாங்கி வைத்து வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளில் கிருஷ்ணர் தங்க வீட்டுக்கு வந்ததாக, பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கிருஷ்ணனின் காலடிகளை கோலமாக தீட்டி வைத்திருக்கிறார்கள். இந்த கிருஷ்ணர் பாத கோலங்கள் பல வீடுகளில் தீட்டப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மழலை குழந்தைகள் கோகுல கிருஷ்ணர் வேடத்தில் வந்து அசத்தினர்.
ஈரோடு பெரிய வலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.இவரது மனைவி தேன்மொழி (வயது 32). இவர் பி.டெக். படித்துள்ளார்.
கணவர் மாதேஸ்வரன் துபாயில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5½ ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை.
தேன்மொழி நேற்று வீட்டில் தனியாக இருந்தார். இதன்பிறகு அவர் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதன்பிறகு தேன்மொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தேன்மொழியின் தந்தை சின்னப்பன் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்து உள்ளார். அதில் தனது மகள் தேன்மொழி வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகவும் எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தாண்டு, கடந்,த 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கி, கொடி ஏற்றம் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது சுடு கஞ்சி தெளிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரிய மண்பானையில் பொங்கல் கஞ்சி வைத்து கொதியானவுடன், கோவில் பூசாரிகள், தென்னை மரக் குருத்தின் மூலம், கஞ்சியை நனைத்து பக்தர்கள் மீது வீசி தெளித்தனர்.
இவ்வாறு கஞ்சியை தெளிப்பதன் மூலம், பக்தர்கள் நீண்ட ஆயுளோடும், செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை. மேலும், குழந்தைபேறு இல்லாத பெண்கள், சுடு கஞ்சி சோற்றை பூசாரியிடம் இருந்து வாங்கி சாப்பிடும் போது, குழந்தை பாக்கியம் உண்டு என்பதும் ஐதீகம்.
இதைத் தொடர்ந்து, பன்றி, ஆடு, கோழி ஆகியவற்றை சுவாமிக்கு பலி கொடுத்து, வயிற்றைக் கிழிந்து, வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொடுக்கும் பரண் ஏறுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இப்படி கொடுக்கப்படும் பழத்தை சாப்பிடும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பதால், 100க்கும் மேற்பட்டோர் வாங்கி சாப்பிட்டு தரிசித்தனர்.
நாளை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களிலிருந்து ம் ஆயிரக்கணக்கான பக்தர்கள்களும் கலந்து கொள்கிறார்கள்.
தேர்த் திருவிழாவுக்கு, அந்தியூர் அரசு போக்குவரத்து கழகம் மூலம், சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற இத்திருவிழாவில், பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 31ம் தேதி மறு வனபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஈரோடு:
பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(40). இவர் பெருந்துறை மெயின் ரோடு பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற மாதவன் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் முன்புற ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 15 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ரொக்கப்பணம் காணாமல் போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவியின் ரெக்கார்டுகளை பார்வையிட்டனர். பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னிமலை முருகன் கோவிலில் மலை மீது தற்போது பயன்படுத்தப்படும் வேங்கை மரத்தேரையே தங்கரதமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலையில் செயல்படும் ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு சார்பாக கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி வேங்கை மரத்தினை பயன்படுத்தி சிறிய தேர் செய்யப்பட்டு அந்த வேங்கை மர திருத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு செவ்வாய் கிழமை தோறும் கட்டணம் செலுத்தி திருத்தேர் உலா நடைபெற்றுவருகிறது.
இதனால் செவ்வாய் கிழமை இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு பூஜையிலும், தேர் ஓட்டத்தையும் காண கூடுகிறார்கள். மேலும் இந்த செவ்வாய் கிழமை வழிபாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வேண்டுகிறார்கள்
இதனால் தற்போதுள்ள வேங்கை மரத்தினால் ஆன பக்தர்களின் வழிபாட்டில் உள்ள வேங்கை மரத்தேரேயே தங்க ரதமாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தமிழகத்திலேயே மிக உயரமாக தங்க ரதம் என்ற சிறப்பை பெறும். எனவே இந்த வேங்கைமர திருத்தேரையே தங்கரதமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி கிராமத்தில் அக்ஷரா என்ற காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த காகித ஆலையில் பீகார் மாநில இளைஞர்கள் பலர் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இதில் விக்கிகுமார் (வயது 19) என்ற வாலிபரும் பணி புரிந்து வந்தார்.
நேற்று இவர் காகித ஆலை கழிவுகள் செல்லும் கன்வேயர் பெல்டில் வேலை செய்தார். அப்போது கன்வேயர் பெல்டில் நடந்து காகித அட்டைகளை விக்கிகுமார் தள்ளி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கன் வேயர் பெல்டில் அவர் தவறி விழுந்து விட்டார். இதனால் அவர் ‘‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’’ என கூக்குரலிட்டார். கீழே நின்று கொண்டிருந்த மற்ற பீகார் மாநில வாலிபர்களும் சத்தம் போட்டனர். ஆனால் அதற்குள் விக்கி குமார் காகித ஆலையின் எந்திரத்தில் சிக்கி கொண்டார்.
இதில் வாலிபர் விக்கி குமார் உடல் காகித கூழ் போல் கூழாகி கொடூரமான முறையில் பலியானார்.
அவரது உடலில் இருந்து கால், கை, எலும்பு மற்றும் நெஞ்சு எலும்பு மட்டும் தான் மிஞ்சியது. அதுவும் பவுடர் போல் நசுங்கி காணப்பட்டது. அவர் அணிந்திருந்த டீ சர்ட்டும் வெளியே வந்தது.
தங்கள் கண் முன் சக தொழிலாளி உடல் கூழாகி இறந்த சம்பவத்தை பார்த்ததும் மற்ற பீகார் மாநில இளைஞர்கள் கதறி அழுது துடித்தனர்.
அவர்கள் கூறும் போது, ‘‘கன்வேயர் பெல்டில் விக்கி குமார் விழுந்த போது உடனடியாக ஆலை நிர்வாகம் எந்திரத்தை நிறுத்தி இருந்தால் விக்கியை காப்பாற்றி இருக்கலாம். மேலும் பணி பாதுகாப்பு உபகரணங்கள் அங்கு தயார் நிலையில் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம்’’ என்று கூறினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆலை நிர்வாக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் அடுத்த ஒத்தக்கடையில் கடந்த 12-ந் தேதி ஈரோடு மாவட்ட உதவி புவியாளர் ரமேஷ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது கரூர் மாவட்டம் அத்திபாளையத்தில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதை டிரைவர் ஜெகநாதன் ஓட்டி வந்தார். சோதனையில் அந்த லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையொட்டி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அந்த லாரி கொடுமுடி தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டது. அதன் சாவி, ஆவணங்கள் ஆகியவற்றை அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்று நள்ளிரவு 12 மணி அளவில் லாரி உரிமையாளர் அன்பழகன் மற்றும் டிரைவர் ஜெகநாதனும் அங்கு வந்தனர். அவர்கள் கள்ளச்சாவி போட்டு லாரியை எடுத்தனர். இதை கண்ட காவலாளி அதை தடுத்தார். ஆனால் அவர்கள் ‘‘லாரியை ஏற்றி உன்னை கொன்று விடுவோம்’’ என மிரட்டி விட்டு லாரியை எடுத்து சென்றுவிட்டனர்.
இது குறித்து 13-ந் தேதி தாசில்தார் கோவிந்தராஜ் கொடுமுடி போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட லாரியை மீட்க இன்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதேஸ்வரன், ரவி, ஆறுமுகம், சமாதான பிரபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் கரூர்-சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் கடத்தப்பட்ட லாரியை மற்ற லாரிகளின் மத்தியில் நிருத்தப்பட்டிருப்பதை கண்டனர். பிறகு அதை மீண்டும் தனிப்படையினர் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக லாரி உரிமையாளர் அன்பழகன், டிரைவர் ஜெகநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கீழ்பவானி பாசன சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே கோரிக்கை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு படி பாசன திட்டங்களுக்கு நீர்பகிர்மானம் செய்ய வேண்டும். பவானி பாசனங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும்.
பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இருக்கும் வரை தண்ணீர் திறக்க கூடாது. கீழ்பவானி பாசனத்தை வஞ்சிக்க கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.
இதில் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, பா.ம.க. மாநில துணை தலைவர் வடிவேல் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ரத்தினசாமி, கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் வடிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி மற்றும் கீழ்பவானி பாசனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்த கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
‘‘நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடு’’ ‘‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்து’’ ‘‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பொதுப் பணித் துறையின் தவறான நீர் பங்கீட்டை கண்டிக்கிறோம்’’ போன்ற கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நம்பியூர் பகுதியிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நம்பியூர் அடுத்த ஓணாண் குட்டை பகுதியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் மற்றும் சென்னியம்மாள் ஆகியோரின் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது மழை வெள்ளத்தில் ஆடுகள் தென்னை மரங்களுக்கு அடியில் ஒதுங்கியது. அப்போது ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரத்தின் அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த ஆடுகளையும் இடி தாக்கியது.
இதில் முருகேசனுக்கு சொந்தமான 18 ஆடுகளும், சென்னியம்மாளுக்கு சொந்தமான 4 ஆடுகளும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கால்நடை டாக்டர் வந்து பிரேத பரிசோதனை செய்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், நிலவருவாய் அலுவலர் லோகேஸ்வரன் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். அவர்கள் இதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
ஆடுகளை பறிகொடுத்த விவசாயி முருகேசன் கண்ணீர் விட்டு அழுதார்.
‘‘நான் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வந்தேன். இப்படி திடீர் இழப்பு வரும் என நான் நினைத்து கூட பார்ககவில்லை. இறந்த எனது ஆடுகளுக்கு இயற்கை இடர்பாட்டில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கூறினார்.






