என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே மருந்துக்கடையில் ரூ.16 ஆயிரம் திருட்டு
பெருந்துறை அருகே மருந்துக்கடையில் ரூ.16 ஆயிரம் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(40). இவர் பெருந்துறை மெயின் ரோடு பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற மாதவன் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் முன்புற ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 15 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ரொக்கப்பணம் காணாமல் போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவியின் ரெக்கார்டுகளை பார்வையிட்டனர். பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






