என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    ஈரோடு:

    கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கிருஷ்ணஜெயந்தி விழா வையொட்டி ஈரோடு மாவட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

    ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், சிவகிரி, கொடுமுடி, பெருந்துறை, கவுந்தபாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    கோவில்களில் உள்ள கிருஷ்ணர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இதேபோல் வீடுகளில் மக்கள் கிருஷ்ணர் சிலைகள் வாங்கி வைத்து வழிபாடு செய்தனர்.

    கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளில் கிருஷ்ணர் தங்க வீட்டுக்கு வந்ததாக, பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கிருஷ்ணனின் காலடிகளை கோலமாக தீட்டி வைத்திருக்கிறார்கள். இந்த கிருஷ்ணர் பாத கோலங்கள் பல வீடுகளில் தீட்டப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மழலை குழந்தைகள் கோகுல கிருஷ்ணர் வேடத்தில் வந்து அசத்தினர்.

    Next Story
    ×