என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பெரிய வலசில் பெண் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார்
    X

    ஈரோடு பெரிய வலசில் பெண் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார்

    ஈரோடு பெரிய வலசில் பெண் என்ஜினீயர் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய வலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.இவரது மனைவி தேன்மொழி (வயது 32). இவர் பி.டெக். படித்துள்ளார்.

    கணவர் மாதேஸ்வரன் துபாயில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5½ ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    தேன்மொழி நேற்று வீட்டில் தனியாக இருந்தார். இதன்பிறகு அவர் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதன்பிறகு தேன்மொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தேன்மொழியின் தந்தை சின்னப்பன் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்து உள்ளார். அதில் தனது மகள் தேன்மொழி வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகவும் எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×