என் மலர்tooltip icon

    ஈரோடு

    வேலை கேட்டு வந்த ஆந்திரா பெண்ணை விபசாரத்தில் தள்ளிய ஈரோடு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் ஈரோடு சோலார் வசந்த நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்கிற பிரான்சிஸ் அவரிடம் நைசாக அணுகி பேச்சு கொடுத்தார்.

    என்னிடம் வெளிமாநில அழகி உள்ளாள். ரூ.1000 கொடுத்தால் அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினாராம். பிறகு தங்கராஜை செல்வி என்ற பெண் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு நிஷா என்ற ஆந்திர மாநில இளம்பெண் இருந்தார்.

    இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரம்பட்டி போலீசார் செல்வி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த செல்வி மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட ஆந்திர அழகி நிஷா கூறும்போது, “வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறி அழைத்து வந்து இப்படி விபசாரத்தில் தள்ளி உள்ளார்கள்.” என்று கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி சாம்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகத்தில் பதற்றம் நிலவுவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் 14-வது நாளாக நிறுத்துப்பட்டுள்ளன.

    கடந்த 12-ம் தேதி கர்நாடகத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் கர்நாடக அரசு பஸ்களும் தமிழகத்தில் இயக்குவதை 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களிடையே முற்றிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு பஸ்கள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரையில் இயக்கப்படுகிறது.

    ஆனால் தமிழக பஸ்கள் எல்லை வரை இயக்கப்படாததால் கர்நாடக பயணிகள் தனியார்,வாடகை வேன்களில் தமிழகம் வரத்தொடங்கினர்.

    கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் இருந்து அம்மாநில அரசு பஸ்கள் தமிழக எல்லையில் அமைந்துள்ள தாளவாடிக்கு 3 நாட்களாக இயக்கப்படுகிறது. இதனால் தமிழக பயணிகள் தாளவாடி வரும் கர்நாடக அரசு பஸ்களில் ஏறி சாம்ராஜ்நகர் வழியாக கர்நாடகத்தின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.

    கர்நாடக பதிவெண் கொண்ட தனியார் பஸ்களும் இரு மாநிலங்களிடையே வந்து செல்கின்றன. கர்நாடகத்தில் விளையும் காய் கறிகளை தமிழக எல்லை வரை கொண்டு வந்து வேறு லாரிகளில் ஏற்றிக்கொண்டு பிற இடங்களுக்கு செல்கின்றனர். தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நுழையாமல் தலமலை வழியாக தாளவாடி செல்கின்றன.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    இதையொட்டி சாம்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழக- கர்நாடகா எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னையில் நடந்த சுவாதி கொலை வழக்கில் கைதான வாலிபர் ராம்குமார் சிறையில் திடீர் என தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

    இந்த வழக்கில் ராம்குமாருக்காக வாதாடும் வக்கீல் நேற்று காலைதான் ராம்குமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசி உள்ளதாக கூறி உள்ளார்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைக்கிறது.

    மாஜிஸ்திரேட்டு தலைமையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது. ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும் இந்த ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    மேலும் ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    ராம்குமார் ஒரு தலித் என்பதற்காக மட்டும் இதை நான் கூறவில்லை. தலித் மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. சாதிய கட்சிகள் தலித் மக்களுக்கு எதிராக பிரசாரத்தை செய்து வருகிறது.

    சிறையில் ராம்குமார் இறந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறை துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறையில் ராம்குமார் இறந்த சம்பவத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதில் உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.
    பவானி அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கில்தொங்கியதில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு செங்குந்தபுரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் ஒரு தனியார் மில்லில் வாட்ச் மேனாக வேலை பார்த்தார். இவரது மனைவி செல்வி (45).

    இவர்களுக்கு சுபாஷினி (17), பிரிமதி (14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே அறையில் தூங்குவார்களாம். கணேசனுக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் கடன் தொல்லையால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கணேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் இரவு கயிற்றால் தூக்கு மாட்டி கொண்டு துடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கால்கள் தூங்கி கொண்டிருந்த மகள்கள் மீது பட்டது.

    நம்மை யார் உதைப்பது? என எழுந்து பார்த்தனர். அப்போது தனது அப்பா மற்றும் அம்மா ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகள்கள் கதறி அழுதனர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்து பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது கணேசன் இறந்து விட்டதாக கூறினர். பிறகு மனைவி செல்வியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலத்தில் வாசற்கால் தட்டி படுகாயம் அடைந்தவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் கோண மூலை அருகே உள்ள ஏ.டி. காலனியைய சேர்ந்தவர் ராமசாமி (வயது 50).

    இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனது வீட்டில் வாசற்கால்  தட்டி  கீழே விழுந்தார். இதனால் அவரது வலது கை மணிக்கட்டில் முட்டி விலகி விட்டது.

    இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ராமசாமியால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

    இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை ஈரோடு மாநகராட்சி முழுவதும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை கீழ்க்கண்ட பகுதி முழுவதும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரிய வலசு, கருக்கல்பாளையம், நாராயணவலசு, குமலன் குட்டை, கே.கே.நகர், சென்னி மலைரோடு, இண்டஸ்டிரிஸ் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், குமரன்நகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப் பட்டறை, பெரியார்நகர், சத்திரோடு, கே.என்.கே. ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு மற்றும் மேட்டூர் ரோடு.

    இத்தகவலை ஈரோடு நகரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து “தமிழ் பசங்க” என்ற அமைப்பினர் ஈரோடு அருகே தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கொடுக்க மறுக்கும் கன்னடர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்களின் தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரிப்போம்” என ருசிகர பிரச்சாரம் செய்தனர்.
    ஈரோடு:

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து “தமிழ் பசங்க” என்ற அமைப்பினர் ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே நின்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இந்த அமைப்பில் உள்ள கல்லூரி மாணவர்கள் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கவிதை எழுதி அதை பொதுமக்களிடம் கொடுத்தனர்.

    மேலும் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா , தமிழனின் எழுச்சி குரல், காவிரி நீரை பகிர்ந்து கொடு” என்பது போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர்.

    இந்த அமைப்பினர் கூறும்போது, “தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கொடுக்க மறுக்கும் கன்னடர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்களின் தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரிப்போம்” என்று கூறினர்.

    இந்த அமைப்பின் இளைஞர்கள் கொடுத்த கவிதைகளை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வாங்கி ஆர்வத்துடன் படித்தனர். ஒவ்வொரு கவிதையும் மனதை தொடுவதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
    நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விடக்கோரியும், கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும் நாளை (16-ந்தேதி) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

    விவசாய சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவற்றின் சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    பவானி அருகே நள்ளிரவில் கர்நாடகா லாரி தீ வைத்து எரித்த ஒரு மர்ம கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    கோவையிலிருந்து ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு லாரி பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு-கவுந்தப்பாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    லாரியை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றார். அருகில் மாற்று டிரைவர் சங்கர் (37) இருந்தார்.

    சந்தை மேட்டு பகுதியில் லாரி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அங்கு வந்து லாரியை நிறுத்தியது.

    பிறகு லாரியில் தீ வைத்து விட்டு இருளில் அந்த கும்பல் தப்பி விட்டது. இதில் லாரி குபு..குபு.. வென தீ பிடித்து எரிந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சித்தோடு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். லாரியில் உள்ள ஜவுளி பொருட்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் தீ அணைக்கப்பட்டதால் லாரி முழுவதும் எரியாமல் தப்பியது.

    மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகி ராமனும் சம்பவ இடத்துக்கு வந்து எரிக்கப்பட்ட லாரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். லாரிக்கு தீ வைத்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தமிழக வாகனங்கள் திம்பத்திலிருந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக்கொண்டு தாளவாடிக்கு சென்றன. கர்நாடக மாநிலத்தில் அமைதி திரும்பினாலும் கர்நாடக மாநில பகுதி வழியாக செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடிக்கு செல்லும் பஸ்களும் வாகனங்களும் சுமார் 5 கி.மீட்டர் மட்டும் கர்நாடக மாநில எல்லை வழியாக செல்ல வேண்டும்.

    ஆனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் கலவரம் தீ வைப்பு சம்பவம் நடந்ததையொட்டி இந்த வாகனங்கள் கர்நாடக எல்லை வழியாக செல்லவில்லை.

    மாறாக திம்பத்திலிருந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக்கொண்டு தாளவாடிக்கு சென்றன.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் அமைதி திரும்பினாலும் கர்நாடக மாநில பகுதி வழியாக செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    இதனால் தொடர்ந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக் கொண்டுதான் வாகனங்கள் தாளவாடிக்கு சென்று வருகிறது. மேலும் தமிழக சோதனை சாவடிகளான பண்ணாரி, ஆசனூர் மற்றும் கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கப்படாததையொட்டி ஈரோடு வனப்பகுதி ரோடு இன்னும் வெறிச்சோடியே காணப்பட்டது.
    நம்பியூர் அருகே இன்று காலை பனியன் கம்பெனி தொழிலாளர்கள் வேன் மீது பஸ் மோதியதில் 13 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    நம்பியூர்:

    நம்பியூரிலிருந்து திருப்பூருக்கு இன்று காலை 7.30மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நாள் என்பதால் பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர்.

    சீட்டில் உட்கார இடம் இல்லாத சிலர் பஸ்சின் முன் பகுதியில் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணித்தனர்.

    அப்போது முன்னாள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. கோபி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் வேனில் சென்றனர். பஸ்சை டிரைவர் சோமசுந்தரம் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    நம்பியூர் பவர் ஹவுஸ் மேட்டில் பஸ் ஏறி கீழே இறங்கியது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த வேனின் பின்புறம் பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    மோதிய வேகத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் முன்புற கண்ணாடியும் உடைந்து நொருங்கியது.

    இந்த விபத்தில் வேனில் சென்ற கோபி அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்த சசிகலா (33), அளுக் குளியை சேர்ந்த பிரகாஷ் (25) உள்பட 9 தொழிலாளர்களும் பஸ்சின் முன்புறம் இருந்த டிரைவர் சோமசுந்தரம் உள்பட 4 பேரும் என மொத்தம் 13பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோபி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சம்பவ இடத்துக்கு நம்பியூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல தலமுறைகளை கண்ட அரசமரம் முறிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே கோசணம் ஊராட்சி பொத்தபாளையத்தில் பழமையான ஒரு அரசமரம் இருந்தது.

    சுமார் 400 ஆண்டு பழமையான இந்த மரம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் அப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அந்த அரசமரத்தை கடவுளாக பாவித்து தரிசனமும் செய்து வந்தனர்.

    மேலும் இந்த மரம் அந்த ஊரின் அடையாளமாகவும் 2 ஆயிரம் சதுர அடியில் பொதுமக்களுக்கு நிழலும் கொடுத்து வந்தது. சுமார் 12 தலைமுறை இம்மரம் பார்த்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

    இப்படி சிறப்பு மிக்க இந்த அரசமரம் நான்காக பிளந்து நடுவில் பெரிய பொந்து ஏற்பட்டது. இப்போது அந்த மரம் முறிந்து கீழே விழுந்து தனது ஆயுளை முடித்து கொண்டது.

    பல தலமுறைகளை கண்ட அந்த அரசமரம் முறிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் பலர் முறிந்து விழுந்த மரத்தை வருத்தத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
    ×