என் மலர்tooltip icon

    ஈரோடு

    மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் எஸ்.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சாந்தினி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7-3-2013 அன்று வகுப்பில் இருந்த சாந்தினி, அருகில் இருந்த மாணவியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அதை பேராசிரியர் பால அரசு (வயது 44) பார்த்தார். அவர் மாணவி சாந்தினியை கண்டித்து கன்னத்தில் அறைந்தார். அனைத்து மாணவ-மாணவிகள் முன்னிலையில் அவர் இப்படி செய்தது, சாந்தினிக்கு அவமானமாக இருந்தது. வீட்டுக்கு வந்த அவர் சோகமாக இருந்தார். அன்றையதினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சாந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவி சாந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பால அரசு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி என்.திருநாவுக்கரசு விசாரித்து தீர்ப்பு அளித்தார்.

    மாணவி சாந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பால அரசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

    பேராசிரியர் பால அரசுவிடம் இருந்து வசூலிக்கும் அபராத தொகை ரூ.50 ஆயிரத்தை மாணவி சாந்தினியின் தாயார் லட்சுமிக்கு இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி என்.திருநாவுக்கரசு உத்தரவிட்டு இருந்தார்.
    கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகத்தான் நாங்கள் எண்ணுகிறோம். ஒருபோதும் நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம், காவிரி ஆறு கன்னடர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று போலீசாரால் கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறினார்.
    சத்தியமங்கலம்:

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து கன்னட அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று தமிழக கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைசாவடியில் முற்றுகையிடப் போவதாக கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார்.

    இதையொட்டி புளிஞ்சூரில் தமிழக கர்நாடக மாநில எல்லையில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதியம் 2.30 மணிக்கு மேல் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன், புளிஞ்சூர் சோதனை சாவடிக்கு திரண்டு வந்து கொண்டிருந்தார்.

    புளிஞ்சூர் அருகே சிக்கலோ அணை பகுதி பக்கம் வந்த போது கர்நாடக மாநில போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 500 பேரை கைது செய்தனர்.

    அப்போது, “கொடுக்க மாட்டோம் கொடுக்க மாட்டோம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம்”.

    “காவிரி ஆறு கன்னடர்களுக்கே சொந்தம்” எங்களுக்கு போக மீதி தண்ணீர் இருந்தால் கொடுப்போம்”, “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்” என்ற பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    போலீசாரால் கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “எங்களுக்கு தமிழர்கள் மீது எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகத்தான் நாங்கள் எண்ணுகிறோம். ஒருபோதும் நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம்.

    காவிரி ஆறு எங்களுக்குத் தான் முதலில் சொந்தம் எங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாதபோது தண்ணீர் கொடு.. என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு போக மீதி தண்ணீர் இருந்தால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாதபோது தண்ணீர் தரக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்ட தமிழக அரசையும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசையும் கண்டிக்கிறோம்.”

    இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

    கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் ஈரோடு பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மகளிர் கோர்ட்டில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மகள் சாந்தினி (வயது 22). இவர் கவுந்தப்பாடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 7-3-2011ம் தேதி சாந்தினி கல்லூரியில் சக மாணவிகளிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த கல்லூரியின் பேராசிரியர் பாலஅரசு(40) என்பவர் மாணவியை கன்னத்தில் அறைந்து புத்தக பையை அவர் முகத்தில் தூக்கி வீசினாராம்.

    இதில் அவமானம் அடைந்த மாணவி சாந்தினி வீட்டுக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பேராசிரியர் பாலஅரசை கைது செய்தனர்.

    இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் பாலஅரசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இந்த அபராதத் தொகையை மாணவியின் தாயாரிடம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

    இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வக்கீல் சுமதி வாதாடினார்.
    காஞ்சிகோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த கங்காபுரம் மெயின் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாமியாத்தாள் (வயது 49). இவர் தனது உறவினர் விஜயலட்சுமி (44) என்பவருடன் மொபட்டில் சென்றார்.

    பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் உள்ள தங்களது உறவினர் உடல்நலம் இல்லாமல் இருந்ததால் அவரை பார்த்து விட்டு இவர்கள் இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    மொபட்டை விஜய லட்சுமி ஓட்டி சென்றார். பின்னால் சாமியாத்தாள் உட்கார்ந்து இருந்தார்.

    இவர்கள் சென்ற மொபட் காஞ்சிக்கோவில் கவுண்டம்பாளையம் வாய்க்கால் மேடு என்ற இடம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போதுபின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.இவர்களில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் தலையில் ஹெல்மெட் போட்டு இருந்தான்.

    ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் விஜய லட்சுமியும், சாமியாத்தாளும் மொபட்டில் சென்ற பொது திடீர் என்று பின்னால் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஆசாமி சாமியாத்தாளின் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்கசெயினை பறித்தான். பிறகு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் காயம் அடைந்த அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறித்து சென்ற 2 ஆசாமிகளுக்கும் சுமார் 25 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த துணிகர சம்பவம் காஞ்சிகோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சாகர் விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு வைத்து விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தினர்.
    சத்தியமங்கலம்:

    நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறைவாக இருந்ததால் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சாகர் விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு வைத்து விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தினர்.

    இதையொட்டி நடந்த யாக பூஜையில் விவசாயிகள் பங்கேற்று மழை பெய்ய வேண்டி வழிபட்டனர். அணையின் நீர்மட்டம் 53.52 அடியாகவும் நீர்வரத்து 164 கனஅடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 70 அடியாகும். நீர்வரத்து 900 கன அடியாகவும் இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் காசியண்ணன், துணைத் தலைவர் ஆர். செங்கோடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளார். அதனால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    தமிழகத்துக்கு மீண்டும் நாளை முதல் 30-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவால் கர்நாடக மாநிலத்தில் தொடர்நது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் மீண்டும் பல போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.

    தமிழகத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியத்துக்கு மேல் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளார்.

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் திட்டமிட்டப்படி தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் நடக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    இதையொட்டி இன்று காலை 7 மணிக்கெல்லாம் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.



    வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வாகனமும் மேலும் அசம்பாவிதம் சம்பவத்தை தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வாகனமும் சாம்ராஜ் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

    காவிரி நீர் பிரச்சனையால் இன்று 15-வது நாளாக சத்தியமங்கலம் வழியாக தமிழக பஸ்களும் வாகனங்களும் செல்லவில்லை. இதனால் இருமாநில பயணிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கோபி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    கோபி:

    கோபி அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்டது. நஞ்சகவுண்டம் பாளையம். இங்குள்ள 1-வது வார்டில் குடிநீருக்காக 3 போர் போடப்பட்டுள்ளது.

    இதில் 2 போர் ரிப்பேராகி உள்ளது. ஒரு போரில் மட்டும் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த போரிலும் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் சரியாக கிடைக்காததால் அவதிபட்டனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த 50 பெண்கள் 30 ஆண்கள் என பொதுமக்கள் காலி குடங்களுடன் கோபி- ஈரோடு ரோட்டில் ஓடக்கரை பிரிவில் இன்று காலை 8 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி போலீசார் விரைந்தனர். மேலும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தாசில்தார் குமரேசனும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். போர்வெல் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதை தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மொடக்குறிச்சி அருகே உரிய அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளரை மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையம் ரிங்ரோடு வழியாக சிலர் அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் கருப்புசாமி, துணை தாசில்தார் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முத்துக்கவுண்டன்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதை அப்போது கரூர் பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனையிட்ட போது உரிய அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததும், லாரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரச்சலூர் அருகே பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள தலவுமலை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் மணியாள் (வயது50).

    அதே பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (49). பெண்கள் இருவரும் தலவு மலை பஸ் ஸ்டாப் அரசமரம் அருகில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக டெம்போ வேன் ஒன்று வந்தது. அந்த வேன் திடீரென எதிர்பாராத விதமாக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் மீதும் மோதியது.

    இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு சோலாரில் வீட்டுக்கதவு பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் சோலார் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) அப்பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாரதாமணி (47) இவர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு போய் விட்டு அப்படியே பழனி கோவிலுக்கும் செல்ல புறப்பட்டு சென்றனர்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் வீட்டுக்கு வந்த போது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி மர்ம ஆசாமிகள் உள்ளே குதித்து உள்ளனர். பிறகு வீட்டின் கதவு பூட்டை அறுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

    வீட்டின் பீரோவை பூட்டி அதன் சாவி பீரோ மேல் இருந்தது. அந்த சாவியை எடுத்த கொள்ளையர்கள் பீரோவை திறந்தனர்.

    அதில் இருந்த செயின், பிரஸ்லட், தோடு என மொத்தம் 8 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி உள்ளனர்.

    இந்த துணிகர நகை- பணம் கொள்ளை சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் சோலார் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவரது மனைவி ஆசியாபேகம் (வயது 55) ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க ஆசியாபேகம் வந்திருந்தார்.

    கலெக்டர் அலுவலகம் வந்த அந்த பெண் திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை கண்டு திடுக்கிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணை தடுத்தனர். மண்எண்ணை பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.

    பிறகு அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    நான் பலகார கடை நடத்தி வருகிறேன். எனது வீட்டை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் ஒரு குடும்பத்தினரை வாடகைக்கு வைத்து உள்ளார்.

    எனக்கு சொந்தமான அந்த வீட்டை மீட்டு என்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

    இந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.
    ஈரோடு அருகே தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    சூரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி ஜெயமணி (வயது 45).

    ஜெயமணி ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் மணிகண்டன் (20). மணிகண்டன் எங்கும் வேலைக்கு போகமல் இருந்தாராம். இதனால் அவரது தாய் ஜெயமணி வேதனை அடைந்த நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ஜெயமணி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்வம் பற்றி சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த ஜெயமணி உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியியில் வைக்கப்பட்டுள்ளது.

    ×