என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரச்சலூர் அருகே பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியது: 2 பெண்கள் படுகாயம்
    X

    அரச்சலூர் அருகே பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியது: 2 பெண்கள் படுகாயம்

    அரச்சலூர் அருகே பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள தலவுமலை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் மணியாள் (வயது50).

    அதே பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (49). பெண்கள் இருவரும் தலவு மலை பஸ் ஸ்டாப் அரசமரம் அருகில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக டெம்போ வேன் ஒன்று வந்தது. அந்த வேன் திடீரென எதிர்பாராத விதமாக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் மீதும் மோதியது.

    இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×