என் மலர்
செய்திகள்

காவிரி ஆறு கன்னடர்களுக்கு மட்டும்தான் சொந்தம்: தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் முழக்கம்
கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகத்தான் நாங்கள் எண்ணுகிறோம். ஒருபோதும் நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம், காவிரி ஆறு கன்னடர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று போலீசாரால் கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறினார்.
சத்தியமங்கலம்:
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து கன்னட அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று தமிழக கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைசாவடியில் முற்றுகையிடப் போவதாக கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார்.
இதையொட்டி புளிஞ்சூரில் தமிழக கர்நாடக மாநில எல்லையில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மதியம் 2.30 மணிக்கு மேல் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன், புளிஞ்சூர் சோதனை சாவடிக்கு திரண்டு வந்து கொண்டிருந்தார்.
புளிஞ்சூர் அருகே சிக்கலோ அணை பகுதி பக்கம் வந்த போது கர்நாடக மாநில போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 500 பேரை கைது செய்தனர்.
அப்போது, “கொடுக்க மாட்டோம் கொடுக்க மாட்டோம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம்”.
“காவிரி ஆறு கன்னடர்களுக்கே சொந்தம்” எங்களுக்கு போக மீதி தண்ணீர் இருந்தால் கொடுப்போம்”, “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்” என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
“எங்களுக்கு தமிழர்கள் மீது எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகத்தான் நாங்கள் எண்ணுகிறோம். ஒருபோதும் நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம்.
காவிரி ஆறு எங்களுக்குத் தான் முதலில் சொந்தம் எங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாதபோது தண்ணீர் கொடு.. என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு போக மீதி தண்ணீர் இருந்தால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாதபோது தண்ணீர் தரக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்ட தமிழக அரசையும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசையும் கண்டிக்கிறோம்.”
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Next Story