என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பியூர் அருகே வேன் மீது பஸ் மோதியது: 13 பேர் படுகாயத்துடன் தப்பினர்
    X

    நம்பியூர் அருகே வேன் மீது பஸ் மோதியது: 13 பேர் படுகாயத்துடன் தப்பினர்

    நம்பியூர் அருகே இன்று காலை பனியன் கம்பெனி தொழிலாளர்கள் வேன் மீது பஸ் மோதியதில் 13 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    நம்பியூர்:

    நம்பியூரிலிருந்து திருப்பூருக்கு இன்று காலை 7.30மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நாள் என்பதால் பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர்.

    சீட்டில் உட்கார இடம் இல்லாத சிலர் பஸ்சின் முன் பகுதியில் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணித்தனர்.

    அப்போது முன்னாள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. கோபி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் வேனில் சென்றனர். பஸ்சை டிரைவர் சோமசுந்தரம் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    நம்பியூர் பவர் ஹவுஸ் மேட்டில் பஸ் ஏறி கீழே இறங்கியது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த வேனின் பின்புறம் பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    மோதிய வேகத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் முன்புற கண்ணாடியும் உடைந்து நொருங்கியது.

    இந்த விபத்தில் வேனில் சென்ற கோபி அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்த சசிகலா (33), அளுக் குளியை சேர்ந்த பிரகாஷ் (25) உள்பட 9 தொழிலாளர்களும் பஸ்சின் முன்புறம் இருந்த டிரைவர் சோமசுந்தரம் உள்பட 4 பேரும் என மொத்தம் 13பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோபி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சம்பவ இடத்துக்கு நம்பியூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×