என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்ட பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் புளியம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பையில் பிடித்த தீ மள...மள...வென எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு படையினர் நள்ளிரவே சென்று தீயை அணைத்தனர். மேலும் புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் 10 பேர் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைத்தனர். இதனால் குப்பை கிடங்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் இந்த குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகை மூட்டம் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் அலர்ஜியாக இருந்தது. அவதிப்பட்டனர். யாராவது அணைக்காத சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டு சென்றார்களா? அல்லது எப்படி தீ பிடித்தது? என தெரியவில்லை.
இந்த குப்பை கிடங்கை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
ஈரோடு:
சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி, கோப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு சவுந்தர்யா (வயது 17) மகளும், சவுந்தர் என்ற மகனும் உள்ளனர்.
சவுந்தர்யா திருப்பூர் மாவட்டம் செல்லப்பம் பாளையத்தில் உள்ள கல்லூரி பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று சவுந்தர்யா கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வேலையை முடித்து கொண்டு சவுந்தர்யா தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த போது சவுந்தர்யா மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சவுந்தர்யா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து கண்ணப்பன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகள் மாயமானது குறித்து புகார் செய்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது முதல் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் வேலைக்குப் போகிறார்களோ..இல்லையோ.. தற்போது பாங்கிகளுக்கும் ஏ.டி.எம்.களுக்கும் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
பெருந்துறையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் பாங்கி சவுத் இண்டியன் வங்கி, கனரா வங்கி பழைய பஸ் நிலையம் ரோட்டில் உள்ள கனரா வங்கி மற்றும் ஐ.ஓ.பி. பாங்கி, ஸ்டேட் பாங்கி, பவானி ரோட்டில் உள்ள இந்தியன் பாங்கி உள்பட அனைத்து வங்கிகளில் இன்று 10-வது நாளாக மக்கள் கூட்டம் கூடி உள்ளது.
இவர்கள் பாங்கி முன் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாயை கொடுத்து மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுத்ததும் பலருக்கு கொடுக்க பணம் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் இவர்கள் ஏமாற்றத்துடன் செல்வதை பார்க்க முடிகிறது. ஏ.டி.எம்.களிலும் ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போய்விடுகிறது.
இதேபோல் பெருந்துறை தபால் நிலையத்திலும் பழைய நோட்டுகளை மாற்ற கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.
தபால் அலுவலகத்துக்கு காலை 7 மணிக்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் காத்திருந்து மதியம் 1 மணிக்கு பணத்தை மாற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.
பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் தொடர்ந்து கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது. வங்கியில் ரூ.2000 கொடுப்பதை கூட பொதுமக்களால் மாற்ற முடியவில்லை.
ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் ஈரோடு ரெயில்வே குட்ஷெட்டில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
திடீரென இவருக்கு காசநோய் ஏற்பட்டது. இதனால் இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற இவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டது. ஸ்டேட் வங்கி கணக்கில் பணம் உள்ளது. சிகிச்சைக்காக பணம் எடுக்க இவரது உறவினர்கள் வங்கிக்கு சென்றனர். விஷயத்தை கூறி பணம் கேட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை கேட்டனர்.
ஆனால் வங்கி ஊழியர்கள் “கணக்கில் பணம் இருப்பவர் கண்டிப்பாக வர வேண்டும். அவர் வந்தால்தான் பணம் கொடுப்போம்” என்று கூறி விட்டார்களாம்.
வேறு வழியின்றி ஆஸ்பத்திரியில் 2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விசுவநாதனை அவரது உறவினர்கள் வங்கிக்கு தூக்கி கொண்டு வந்தனர்.
ஸ்டேட் வங்கியில் நீண்ட வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை. இதை கண்டு பரிதாபப்பட்டு கூட்டத்தில் நின்ற மக்கள் முதலில் அவரை செல்ல வழிவிட்டனர்.
இதையொட்டி அவரை 2 உறவினர்களும் கைத்தாங்கலாக வங்கிக்கு அழைத்து கொண்டு சென்றனர். அங்கு அவர் கையெழுத்திட்டு சிகிச்சைக்கு பணம் எடுத்து சென்றார்.
இது குறித்து விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஆவேசமாக கூறும்போது, “இது ஒரு மோசமான திட்டம். இதனால் எங்களை போன்ற ஏழைகள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது என்னமோ... மை வைத்தால்தான் பணம் கொடுப்பாங்களாமே... எங்க பணத்தை வாங்குவதற்கு எதற்குங்க மை?” என்று கூறினர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 70 அடிக்கும் மேல் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று 44 அடியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 300 கனஅடி வீதம் வந்த தண்ணீர் 770 கன அடியாக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1635 கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நேற்று அணையின் நீர்மட்டம் 44.10 அடியாக இருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.10 அடியாக இருந்தது. அணையில் ஒரே நாளில் 1 அடி உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து கூடி இருப்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 205 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மோள பாளையம் கார்த்திகை வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). தனியார் பஸ் கண்டக்டர்.
அதே பகுதியை சேர்ந்த 12-வயது சிறுமியை பிரகாஷ் வாயை பொத்தி கடத்திச் சென்றார். பிறகு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது பற்றி கோபி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது பற்றிய வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட பஸ் கண்டக்டர் பிரகாசுக்கு சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 1 வருட ஜெயில் தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மோளபாளையம் கார்த்திகை வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). தனியார் பஸ் கண்டக்டர்.
அதே பகுதியை சேர்ந்த 12-வயது சிறுமியை பிரகாஷ் வாயை பொத்தி கடத்திச் சென்றார். பிறகு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது பற்றி கோபி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது பற்றிய வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட பஸ் கண்டக்டர் பிரகாசுக்கு சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 1 வருட ஜெயில் தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பூலாவலசு பனங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் குப்புச்சாமி (வயது 72) விவசாயி. இவர் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக கந்தசாமி பாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு சென்றுள்ளார்.
ஈரோட்டிலிருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் தனது சைக்கிளில் குப்புச்சாமி சென்றபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று விவசாயி குப்புச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே குப்புச்சாமி பலியானர். விபத்து குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரித்து வருகிறார்.
பணம் மாற்ற வங்கிக்கு சென்ற விவசாயி பலியான சம்பவம் சிவகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. இதில் 15 அடி வெறும் சேறும்-சகதியும் கொண்டது ஆகும்.
கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் இருந்தது. இதனால் பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும் பயன்பெற்றனர். பயிர்களை காப்பாற்றினர்.
ஆனால் இந்த ஆண்டு மழை பெய்யாததால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் வாய்க்கால்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முடியவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 44.10 அடியாக இருந்தது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 291 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று 303 கன அடி தண்ணீர் வந்தது.
இன்று (புதன்கிழமை) வினாடிக்கு 770 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று தண்ணீர் வரத்து லேசாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்கும் 205 கன அடி திறந்து விடப்படுகிறது.
நீலகிரி மலையில் உள்ள பில்லூர் அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இந்த தண்ணீர் அணைக்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் குறைந்த அளவு காற்றழுத்த மண்டலத்தால் ஊட்டி மலை பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி ஊட்டி மலைப்பகுதிகளில் மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நீர்மட்டமும் உயர வாய்ப்பு உள்ளது.
ஈரோடு:
நம்பியூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 48) கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறும் போது, ‘‘நான் நம்பியூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளேன். அதற்கு அதிகாரிகள் வீட்டு வரி ரசிது கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள். இது குறித்து பல முறை கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இங்கு தர்ணா போராட்டம் நடத்த வந்துதேன்’’ என்று கூறினார்.
போலீசார் அவரிடம் இங்கு தர்ணா போராட்டம் நடத்தக் கூடாது. உள்ளே சென்று மனு கொடுத்து விட்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் உங்களை கைது செய்வோம் என கூறினர்.
இதையொட்டி அவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து சென்று விட்டார்.
கடந்த 8-ந் தேதி மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. அதன் பிறகு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி ரூபாய் 4 ஆயிரம் வரை கடந்த 4 நாட்களாக புதிய 2 ஆயிரம் நோட்டுகளாகவும், மற்றும் 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் கால்கடுக்க நாள் முழுவதும் வரிசையில் நின்று மாற்றிச் சென்றவாறு உள்ளனர்.
இந்த நிலையில் கோபியில் ஒரு டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் மாலை 5 மணியளவில் 1,000 ரூபாய் நோட்டை எடுத்துச் சென்று சரக்கு கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடையில் இருந்த ஊழியர் 1,000 ரூபாய் நோட்டை செல்லாது என வாங்க மறுத்து சரக்கு இல்லை என்று சொல்லி விட்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொருவர் 100 ரூபாய் நோட்டு கொடுத்து சரக்கு வாங்கிச் சென்றார்.
இதைப் பார்த்த 1,000 ரூபாய் கொண்டு வந்த குடிமகன் அந்த கடை ஊழியரைப் பார்த்து ரூ.100 பெரிதா? ரூ.1,000 பெரிதா? அவருக்கு மட்டும் ஏன் சரக்கு கொடுக்கிறீர்கள்? எனக்கு தரக் கூடாதா? என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசினார். சிறிது நேரத்தில் போதை தெளிந்தவுடன் ரூ.1,000 நோட்டை கிழித்து விட்டோமே என கதறி அழுதார். மற்றவர்கள் இதை பரிதாபத்தோடு பார்த்து சென்றனர்.
பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் நல்ல நிலையில் இருந்தாலே வங்கியில் செலுத்தி மாற்றுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் பழைய 1,000 ரூபாய் நோட்டை குடிமகன் ஒருவர் கிழித்து வீசியது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோடுட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
செல்லாத நோட்டுகளை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் அதிகாலை முதலே வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்து கிடந்து பணத்தை மாற்றி செல்கின்றனர்.
இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் கடந்த 10-ந் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல் முருகன் கூறியதாவது:-
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து மக்கள் தபால் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோடுட்டுகளை வாங்கி செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடி பழைய நோட்டுகளை பொது மக்கள் மாற்றி சென்றுள்ளனர். பொது மக்களின் வசதிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 தலைமை தபால் அலுவலங்கள், 65 துணை தபால் அலுவலகங்களில் பண பட்டுவாடா நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






