என் மலர்
செய்திகள்

பு.புளியம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து - புகை மூட்டத்தால் மக்கள் அவதி
பு.புளியம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்ட பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் புளியம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பையில் பிடித்த தீ மள...மள...வென எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு படையினர் நள்ளிரவே சென்று தீயை அணைத்தனர். மேலும் புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் 10 பேர் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைத்தனர். இதனால் குப்பை கிடங்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் இந்த குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகை மூட்டம் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் அலர்ஜியாக இருந்தது. அவதிப்பட்டனர். யாராவது அணைக்காத சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டு சென்றார்களா? அல்லது எப்படி தீ பிடித்தது? என தெரியவில்லை.
இந்த குப்பை கிடங்கை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story