என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்

    சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி, கோப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு சவுந்தர்யா (வயது 17) மகளும், சவுந்தர் என்ற மகனும் உள்ளனர்.

    சவுந்தர்யா திருப்பூர் மாவட்டம் செல்லப்பம் பாளையத்தில் உள்ள கல்லூரி பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று சவுந்தர்யா கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வேலையை முடித்து கொண்டு சவுந்தர்யா தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த போது சவுந்தர்யா மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சவுந்தர்யா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து கண்ணப்பன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகள் மாயமானது குறித்து புகார் செய்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×