என் மலர்
செய்திகள்

சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் கண்டக்டருக்கு 10 ஆண்டு ஜெயில்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மோளபாளையம் கார்த்திகை வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). தனியார் பஸ் கண்டக்டர்.
அதே பகுதியை சேர்ந்த 12-வயது சிறுமியை பிரகாஷ் வாயை பொத்தி கடத்திச் சென்றார். பிறகு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது பற்றி கோபி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது பற்றிய வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட பஸ் கண்டக்டர் பிரகாசுக்கு சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 1 வருட ஜெயில் தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.






