என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஏசுபிரான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் என்று கிறிஸ்வர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது.
இறைப்பணியை தொடங்குதவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம், இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் மாமிச உணவை தவிர்த்தும் ஒரு வேளை உணவை விட்டுகொடுத்தும் விரதம் இருப்பார்கள்.
இன்று 40 நாள் தவக்காலம் தொடங்குவதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை -ஆராதனைகள் நடக்கிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள சி.எஸ்.ஐ பிரப் ஆலயம், ஸ்டேட் பாங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயம், ரெயில்வே காலனியில் உள்ள இருதயஆண்டவர் ஆலயம், மற்றும் திருநகர் காலனி, பொய அக்ரகாரம், பவானி மெயின் ரோடு மற்றும் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தவக்காலம் முடிந்து 40-வது நாள் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படுகிறது.
பிறகு 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்தவர் தன சேகரன் (வயது 35). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பெயர் கோகிலா (29). மகன் கவுதம் (8). இவர்கள் 3 பேரும் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை தனசேகரன் ஓட்டிச் சென்றார்.
கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே அத்தாணி சாலையில் வந்த போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ரோட்டோரம் ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது.
இதில் கோகிலா கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் தனசேகரன் அவரது மகன் கவுதம் ஆகிய 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். காருக்குள் இருந்தபடி இறந்து கிடந்த கோகிலா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண்முன் விபத்தில் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாணிக்கம் பாளையம் ராஜ் நகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் விஜய் (வயது 23). வீரப்பன் சத்திரம். பண்ணக்காட்டை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் இந்துமதி (22.)
விஜய்யும் இந்துமதியும் 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வந்தார்களாம். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.
ஆனால் இவர்களின் காதலுக்கு இந்துமதி வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று கூறினர். எனினும் இந்துமதியோ காதலனை கைபிடிக்க முடிவோடு இருந்தார்.
இந்த நிலையில் இந்துமதி வீட்டை விட்டு வெளியேறினார். பவானி கூடுதுறையில் நண்பர்கள் முன்னிலையில் விஜய், இந்துமதி திருமணம் நடக்க இருந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்துமதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்தனர். தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தினர். சம்பவ இடத்துக்கு பவானி மகளிர் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் காதலர்கள் மற்றும் இரு தரப்பினரையும் ஈரோடு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த காதலர்களை போலீசார் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.மகளிர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண் வீட்டார், “இந்துமதி கழுத்தில்தான் தாலி கட்டவில்லையே.. அதனால் எங்கள் பெண்ணை எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினர்.
இதனால் போலீசார் காதலர்களை போலீஸ் நிலையம் உள்ளே வைத்து விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது தன் பையில் வைத்திருந்த தாலி கயிற்றை திடீரென விஜய் எடுத்து காதலி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டார். “தாலி கட்டிவிட்டேன் நாங்கள் திருமணம் செய்து விட்டோம்” என்று கூறினார்.
ஆனால் இதற்கு பெண் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தாலி கட்டாமல் தான் இருந்தனர். எப்படி இப்போது தாலி கட்டினார்? எங்கள் பெண்ணை எங்களுடன் அனுப்புங்கள்” என்று கூறினர்.
இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர்.
பிறகு போலீசார் இந்துமதியிடம் கேட்டபோது, “நான் என் காதலனுடன் தான் செல்வேன்” என்று திட்ட வட்டமாக கூறினார்.
இதை தொடர்ந்து காதல் ஜோடியை போலீசார் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த காதல் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பொதுவாக தலமலை, ஆசனூர், கேர்மாளம் மற்றும் தெங்குமரகடா செல்லும் வனம் ஆகிய அடர்ந்த காடுகளில் புலிகள் நடமாட்டம் முன்பு காணப்பட்டது.
ஆனால் தற்போது பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
நேற்றும் இன்றும் பண்ணாரி வனப்பகுதியில் புகுந்து வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் பல இடங்களில் புலிகளின் கால்தடத்தை பார்த்து உள்ளனர். இப்புலிகள் அப்பகுதியில் நடமாடும் மான்கள் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடி வனசோதனை சாவடி அருகே உள்ள தடுப்பணையில் உள்ள தண்ணீரை குடித்து அங்கேயே முகாமிட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாகவும் இரை மற்றும் தண்ணீருக்காக பண்ணாரி காட்டுக்கு புலிகள் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கோபி:
திருப்பூர் மாவட்டம் கருமாரபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). இவரது உறவினர்கள் தியாகராஜன் (33), ராஜேந்திரன் (42).
இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள மாயவனம் கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று காரில் வந்தனர். பிறகு இரவு 7 மணியளவில் ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
கோபி அருகே உள்ள கெட்டிசெலியூர் அருகே ஒரு பிரிவில் சென்றபோது திடீரென கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது.
இதில் சண்முகம் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சண்முகம் உயிருக்கு போராடினார். அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தவிபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை, அருண கிரிநாதர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). சுரேஷ் சம்பவத்தன்று தனது நண்பர் திருமூர்த்தி என்பவருடன் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை திருமூர்த்தி ஓட்ட சுரேஷ் பின்னால் உட்கார்ந்து வந்தார். சென்னிமலை- பெருந்துறைரோடு எல்லைமேடு பஸ் நிறுத்தம் அருகேசென்றபோதுஅந்த வழியாகவந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் திருமூர்த்தியும், சுரேசும் தூக்கி வீசப்பட்ட னர். சுரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. திருமூர்த்திக்கு காலில் லேசமான காயம் ஏற்பட்டது.
உயிருக்காக போராடி கொண்டிருந்த சுரேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது நண்பர் திருமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கிராமம், துரையன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது42). தொழிலாளி.
சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக வேதனையுடன் இருந்துள்ளார். சரவணனுக்கு அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
சம்பவத்தன்று சரவணன் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரவணனை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழங்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முன்னதாக நேற்று சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் கணக்கெடுக்கும் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட ஆசனூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
ஒவ்வொரு பகுதிக்கும் தலா 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் இன்று காலை 6 மணிக்கு புகுந்தனர். மொத்தம் 250 பேர் வனப்பகுதிக்குள் புகுந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணியை தொடங்கினர்.
இவர்கள் நீர்நிலைகளில் உள்ள விலங்குகளின் எச்சம், கால்தடங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலையில் நடந்த இந்த பணியில் தலமலை, கேர்மாளம் ஆகிய வனத்தில் புலி மற்றும் சிறுத்தைகளை நேரில் பார்த்ததாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.
நடிகை பாவனாவுக்கு நடந்த பலாத்கார சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்காக அவமானப்பட வேண்டும். சிறுமிகளுக்கும் கூட இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என் தந்தை போல் (கங்கைஅமரன்) எனக்கு இசை துறையில் ஆர்வம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே டைரக்டராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்து விட்டது. என் தம்பி பிரேம்ஜி இசையமைப்பாளராக வர வேண்டும் என்று தான் எங்கள் குடும்பத்தினர் ஆசை.

எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி நகர் மன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று நடந்தது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வரவேற்றார்.
விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிவித்தார். இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா “லேப்டாப்” கள் வழங்கப்பட உள்ளது.
இதில் ஆங்கில மொழி குறிப்புகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இந்த ஆண்டு முன்னதாகவே அரசு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியாக உள்ள ஆசிரியர்-ஆசிரியை பணிஇடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு ஆலோசித்து விரைவில் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.
அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் வாழ்க்கை தரம் உயர அரசு பள்ளிகளில் இனி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி:
கோபி பெரியார் திடலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
நான் 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய காலத்திலிருந்தே எதற்கும் மாறாமல் எனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்து அங்கீகாரம் செய்ததால் தான் தற்போது பள்ளிகல்வித்துறை அமைச்சராக உங்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டாதீர்கள். நான் பாய்ந்தால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அமைதியாக இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா பலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்தார். ஆனால், அவர்கள் இன்றைய தினம் மாற்று அணிக்குச் சென்று அதிமுகவிற்கே துரோகம் செய்து விட்டார்கள். அவர்களைப் பற்றி பேசி நான் எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்ப வில்லை.
பன்னீர்செல்வம் தி.மு.க. வோடு சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்க திட்டமிட்டார். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், 2006-ம் ஆண்டு மு.க.அழகிரியோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து, பன்னீர்செல்வத்தின் கட்சி பொறுப்புகள், உறவினர்களுடைய பொறுப்புகளை ஜெயலலிதா பறித்தார்.
முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருந்தபோது எனக்கும் அமைச்சர் பதவி வழங்குவதாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக பலர் குளறுபடிகள் செய்தனர். அதை நான் சொல்ல விரும்பவில்லை. செங்கோட்டையனிடமிருந்து பதவியை பறித்துவிட்டேனே என ஜெயலலிதா வருத்தப்பட்டார். இதை நான் மூடிமறைக்கத் தேவையில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வை சரியான முறையில் வழிநடத்த நான் உறுதுணையாக இருப்பேன்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவரே தனது சட்டையை கிழித்துக் கொண்டு மக்களிடம் அனுதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். இது ஒருக் காலும் நடக்காது. சட்ட மன்றத்தில் தி.மு.க. ஆடிய ஆட்டம் பற்றி சொல்ல வேண்டுமா?
தற்போதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது. இன்னும் 4¼ ஆண்டு மட்டு மல்ல, தொடர்ந்து 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவது அதிமுக தான். அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக பாடுபடுவார்கள்,
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள், அதிமுக நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 10 வயது மகள் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
உடல் நலக்குறைவால் அச்சிறுமி ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வந்தாள். பாட்டி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாள்.
அச்சிறுமியின் பாட்டி சில வீடுகளை வாடகைக்கு விற்றிருந்தார். சம்பவத்தன்று சிறுமியின் பாட்டி கடைக்கு சென்று விட்டார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள்.
அப்போது வாடகை வீட்டில் குடியிருக்கும் சாரு(வயது20) என்ற வாலிபர் சிறுமி வீட்டு கதவை தட்டியுள்ளார். சிறுமி கதவை திறந்ததும் சிறுமியிடம் நைசாக பேசி அவரை படுக்கையறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது கடைக்கு சென்றிருந்த சிறுமியின் பாட்டி வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் சாரு வேகமாக ஓடிவிட்டான். நடந்தது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறி அழுதாள்.
இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கும், சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ், உறுப்பினர் நிஷா, ஜீலியட் ஆகியயோர் வந்து விசாரித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாருவை கைது செய்தனர்.






