என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் அருகே திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    அந்தியூர் அருகே திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    அந்தியூர் அருகே தொழிலாளிக்கு 42 வயதாகியும் திருமணம் நடக்காததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கிராமம், துரையன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது42). தொழிலாளி.

    சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக வேதனையுடன் இருந்துள்ளார். சரவணனுக்கு அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    சம்பவத்தன்று சரவணன் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து வாந்தி எடுத்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரவணனை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழங்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×