என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது: கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் பிரார்த்தனை
    X

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது: கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் பிரார்த்தனை

    கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஏசுபிரான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் என்று கிறிஸ்வர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது.

    இறைப்பணியை தொடங்குதவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம், இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் மாமிச உணவை தவிர்த்தும் ஒரு வேளை உணவை விட்டுகொடுத்தும் விரதம் இருப்பார்கள்.

    இன்று 40 நாள் தவக்காலம் தொடங்குவதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை -ஆராதனைகள் நடக்கிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள சி.எஸ்.ஐ பிரப் ஆலயம், ஸ்டேட் பாங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயம், ரெயில்வே காலனியில் உள்ள இருதயஆண்டவர் ஆலயம், மற்றும் திருநகர் காலனி, பொய அக்ரகாரம், பவானி மெயின் ரோடு மற்றும் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தவக்காலம் முடிந்து 40-வது நாள் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படுகிறது.

    பிறகு 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×