என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
    X

    ரூ.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

    • தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 1,539 மூட்டைகள் கொண்ட 74 ஆயிரத்து 944 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.77.60 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.81.83 காசுகள், சராசரி விலையாகரூ.79.80 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்த பட்சவிலையாக ரூ.57.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.09 காசுகள், சராசரி விலையாக ரூ.71 என மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    Next Story
    ×